Vanitha Daughter | ’ஒழுங்கா போயிடு ..இல்ல பூட்டாலேயே அடிச்சுடுவேன் ‘ - வனிதா மகளிடம் தகராறு செய்த இளம்பெண்..
"இப்படி வனிதா செய்தது சரியா ‘ இந்த முறையாவது திருந்தி இருக்கலாமே , ஏன் அழுது சீன் போடுறாங்க "என சரமாரியாக கேள்வி கணைகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய பரிணாமமான பிக்பாஸ் அல்டிமேட் தற்போது ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக பிக்பாஸ் போட்டியின் முந்தைய சீசன்களில் யார் அதிகம் விமர்சிக்கப்பட்டார்களோ அவர்களைத்தான் பிக்பாஸ் குழு களமிறக்கியிருப்பதை போன்றே தெரிகிறது. போட்டி ஆரமித்த அடுத்த நாளே பிக்பாஸ் வீட்டிற்குள் அதகளம் ஆரமித்துவிட்டது. குறிப்பாக வனிதா தனக்கு காஃபி பவுடர் வேண்டும் என பிக்பாஸிடம் ஒரு குழந்தையை போலவே அடம்பிடிக்க ஆரமித்துவிட்டார்.
காஃபி கொடுக்காவிட்டால் , நான் மற்றவர்களுக்கு டீ கொடுக்க மாட்டேன் என அதனை மறைத்தும் வைத்திருந்தார். அதன் பிறகு சொல்லவா வேண்டும் ஆளாளுக்கு வனிதாவை கேள்வி கேட்க , ஒரு வழியாக பட்ஜெட் டாஸ்க் மூலம் ஹவுஸ் மேட்ஸிற்கு காஃபி பவுடர் கிடைத்தது.
View this post on Instagram
மறுபடியும் காஃபி பவுடர் எனக்கானது என அதை வனிதா பொம்பை போல் தன்னுடனே வைத்துக்கொள்ள , ஆத்திரமடைந்த அபிராமி காஃபி கப்பை எல்லாம் உடைத்து நியாயம் கேட்டார். அதன் பிறகு வனிதா அபிராமியை தன் பாணியில் திட்டிவிட்டு , அழ தொடங்கிவிட்டார். வனிதா செய்தது நியாயமா ? வனிதா இடத்தில் வேறு யாராவது இருந்தால் இப்படி செய்ய விட்டிருப்பாரா என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கமெண்டுகளை தெறிக்க விட்டனர்.
இந்த நிலையில்தான் வனிதாவின் நெருங்கிய தோழியும் , அவரது மூத்த மகளும் பிரபல யூடியூப் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி கொடுத்தனர். வனிதா தொடங்கியிருக்கும் அவரது புதிய ஆடை கடையில் பேட்டி நடைபெற்று கொண்டிருக்கும்பொழுது , இடையில் குறுக்கிட்ட ஒரு இளம்பெண் , வனிதா மகளை பார்த்து ‘நீங்கள் வனிதா மகள்தானே ‘ என கேட்க , அதற்கு அவர் ‘ ஆமாம் ..தற்போது நேர்காணல் சென்றுகொண்டிருக்கிறது. நீங்கள் கொஞ்சம் காத்திருக்க முடியுமா ?’ என கேட்க, அதற்கு அந்த இளம்பெண் , “எனக்கு வனிதா பற்றி சில கேள்விகள் கேட்க வேண்டும் “ என்றார். அதன்பிறகு குறுக்கிட்ட வனிதாவின் தோழி , நேர்காணல் முடிந்தது கேட்கலாம் ‘ என கூற, அந்த இளம்பெண் விடுவதாக தெரியவில்லை. சரி கேள்வி என்ன கேளுங்கள் என்றதும் , ‘ஒரு காஃபி பவுடருக்கு , இப்படி வனிதா செய்தது சரியா ‘ இந்த முறையாவது திருந்தி இருக்கலாமே , ஏன் அழுது சீன் போடுறாங்க ‘ என சரமாரியாக கேள்வி கணைகளை தொடுக்க , அங்கிருந்தவர்கள் அந்த பெண்ணை கண்ட்ரோல் செய்ய முயற்சி செய்தனர்.
வனிதாவின் தோழி மற்றும் மகள் இருவருமே அந்த பெண்ணிடம் நாகரீகமான முறையில் விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்த நிலையில் , திடீரென அந்த பெண் வனிதா குறித்து அடுத்தடுத்து தவறாக பேச முற்பட்டபொழுது, அவரை கடையை விட்டு வெளியேறும்படி சொன்னார் வனிதா தோழி சௌமியா. ஆனால் அந்த பெண் கேட்பதாக தெரியவில்லை. உடனே ஆத்திரம்டைந்த சௌமியா ‘ ஒழுங்கா போயிடு ..இல்ல பூட்டாலேயே அடிச்சுடுவேன் ‘ என ஆத்திரத்தில் சொல்ல , அந்த பெண் அங்கிருந்து பேசிக்கொண்டே வெளியேறினார். அதன் பிறகு பேசிய ஜோவிகா , இப்படியானவர்கள்தான் சமூக வலைத்தளங்களிலும் இருக்கிறார்கள். இதனை எதிர்த்து கேள்வி கேட்டால் , வனிதா மகளுக்கு நாகரீகம் தெரியவில்லை என்பார்கள் என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.