Thunivu Update: துணிவு டே; சரவெடியை தயாரா வச்சுக்கோங்க..! ரசிகர்களை உற்சாகப்படுத்திய ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா..!
தினசரி ஏதாவது ஒரு துணிவு படத்தின் அப்டேட் வெளியாகி வருகிறது. அந்த வகையில் பட்டாசுகளை குவித்து தயாராகுங்கள் என ஒளிப்பதிவாளரின் ட்வீட் தல ரசிகர்களை திக்கு முக்காட வைத்துள்ளது.
அஜித்குமார் நடிப்பில் வரும் பொங்கலை முன்னிட்டு வெளியாகவிருக்கும் படம் துணிவு. ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தின் மீது நாளுக்கு நாள் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. பொதுவாகவே ஒரு படம் வெளியாகும் முன்னர், பலவிதமான புரமோஷன் வேலைகள் நடக்கும். ஆனால், வழக்கத்திற்கு மாறாக ஹெச். வினோத் - போனி கபூர்- அஜித் கூட்டணி எப்போதும் இல்லாத அளவிற்கு, துணிவு படத்திற்காக பயங்கரமான புரமோஷனில் ஈடுபட்டுள்ளது.
அப்டேட்களால் தாக்கும் துணிவு :
துணிவு படம் குறித்து அறிவிப்பு வந்தவுடன், அஜித்தின் பைக் ஸ்டில்ஸ், அஜித்தின் புது லுக் ஸ்டில்ஸ் உள்ளிட்ட அப்டேட்கள் அடுக்கடுக்காக வந்த வண்ணம் உள்ளன. தற்போது, படத்தின் ப்ரோமோஷன் வீடியோ ஒன்று வெளியாகிவுள்ளது. இதில், ஸ்கை டைவிங் செய்யும் கலைஞர்கள் சிலர், ஹெலிகாப்டரில் இருந்து குதித்து துணிவு படத்தின் போஸ்டரை வானத்தில் பறக்கவிடும் அப்டேட் நேற்று வெளியானது.
Just saw something. Buy extra crackers. Lots of extra crackers.
— NIRAV SHAH (@nirav_dop) December 29, 2022
என்ன ஸ்பெஷலாக இருக்கும் :
துணிவு டே என அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டதால் என்ன சர்ப்ரைஸ் அன்று வெளியாக போகிறது என மிகுந்த ஆர்வத்தில் இருந்த ரசிகர்களுக்கு தற்போது மற்றுமொரு இன்ப அதிர்ச்சியான ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார் ஒளிப்பதிவாளரான நீரவ் ஷா.
"இப்போது தான் நான் சிலவற்றை பார்த்தேன். கூடுதலாக பட்டாசுகளை வாங்குங்கள். கொஞ்சம் கூடுதலாகவே பட்டாசுகள் இருக்கட்டும்". அவரின் இந்த ட்வீட் லைக்ஸ்களை குவித்து வருகிறது. இந்த அப்டேட் ரசிகர்களின் ஆர்வத்தை பல மடங்காக அதிகரித்துவிட்டது. அப்படி என்ன ஸ்பெஷலாக இருக்கும் என அவரவரின் யூகங்களை ஆரம்பித்துவிட்டார்கள்.
Get ready AK Bloods #Thunivu Pre Release Celebration in your Ram Cinemas this Dec 31st Evening 6.00PM with grand Release of Thunivu Trailer 🔥
— Ram Muthuram Cinemas (@RamCinemas) December 28, 2022
Bookings will open in few minutes !! pic.twitter.com/zwKjQ0dNgy
துணிவு படத்தின் ட்ரைலர் டிசம்பர் 31ம் தேதி வெளியாகவுள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் டிசம்பர் 31ம் தேதியன்று ராம் சினிமாஸ் திரையரங்கில் மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் துணிவு படத்தின் ட்ரைலர் வெளியாகவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான புக்கிங் விரைவில் தொடங்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர்.
டிசம்பர் 31ம் தேதிக்காக தல ரசிகர்கள் வெயிட்டிங் !!!