Cinema Headlines : தங்கலான் டிரைலர் ரிலீஸ்.. நடிப்பை கைவிடப்போகும் துஷாரா...சினிமா செய்திகள் இன்று
July 9 Cinema Headlines : தங்கலான் படத்தின் டிரைலர் , நடிப்பை கைவிடப் போகும் துஷாரா உட்பட இன்றைய சினிமா செய்திகளைப் பார்க்கலாம்
![Cinema Headlines : தங்கலான் டிரைலர் ரிலீஸ்.. நடிப்பை கைவிடப்போகும் துஷாரா...சினிமா செய்திகள் இன்று cinema headlines july 9th tamil cinema news thangalaan trailer release date dushara vijayan to quit acting Cinema Headlines : தங்கலான் டிரைலர் ரிலீஸ்.. நடிப்பை கைவிடப்போகும் துஷாரா...சினிமா செய்திகள் இன்று](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/09/f2bae56a677f0cc787acf844991f65461720524279245572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தங்கலான் டிரைலர்
பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் தங்கலான். மாளவிகா மோகனன் , பார்வதி திருவொத்து , பசுபதி உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் . தங்கலான் படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என சமீபத்தில் தகவல்கள் வெளியாகியதைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாக இருக்கிறது. வரும் ஜூலை 10 ஆம் தேதி ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கும் தங்கலான் படத்தின் டிரைலர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
மேலும் படிக்க : Thangalaan: 'தங்கலான்' ஆட்டம் ஆரம்பம்! டிரைலர் ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு... ரசிகர்கள் உற்சாகம்
நடிப்பை கைவிடப்போகும் துஷாரா
சார்பட்டா , நட்சத்திரம் நகர்கிறது , அநீதி ஆகிய படங்களில் நடித்த துஷாரா விஜயன் ரசிகர்களை அதிர்ச்சி அடையவைக்கும் ஒரு தகவலை தெரிவித்துள்ளார். தனது 35 வயதிற்கு மேல் நான் நடிப்பை கைவிடப் போவதாகவும் 35 வயதிற்கு மேல் தான் சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். துஷாரா தற்போது தனுஷ் நடித்துள்ள ராயன் , ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் , மற்றும் விக்ரம் நடித்து வரும் வீர தீர சூரன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் படிக்க ; Dushara Vijayan : 35 வயதுக்கு மேல் சினிமாவில் இருக்கமாட்டேன்.. துஷாரா விஜயன் சொன்னது என்ன?
மலேசியா பிரதமரை சந்தித்த ஏ.ஆர் ரஹ்மான்
இசையமைப்பாளர் ஏ . ஆர் ரஹமான் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமை சந்தித்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வரும் ஜூலை 27 ஆம் தேதி மலேசியாவில் நடக்கவிருக்கும் ஏ ஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சியை முன்னிட்டு தனது ரசிகர்களை சந்தித்தார் ரஹ்மான் . இதனைத் தொடர்ந்து மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமை சந்தித்த அவர் இந்தியா மற்றும் மலேசியா இடையிலான கலாச்சார பரிமாற்றங்கள் தொடர்பாக உரையாடினார்.
மேலும் படிக்க : A R Rahman : மலேசிய பிரதமரை சந்தித்த இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான்
உஷா உதுப் கணவர் மரணம்
பாப் பாடகியாக அறிமுகமாகி இந்திய சினிமாவில் தன் கர்ஜிக்கும் குரல் மற்றும் பர்சனாலிட்டியுடன் வலம் வந்து ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர் பாடகி உஷா உதுப்.இந்தி சினிமாவில் பின்னணிப் பாடகியாக தன் பயணத்தைத் தொடங்கி பின் தமிழ், மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளிலும் பாடியுள்ளார். எம்.ஜிஆரின் இதயக்கனி தொடங்கி, இளையராஜா இசையில் அஞ்சலி படப்பாடல், தமிழ் சினிமாவில் நடிப்பு, இசை நிகழ்ச்சியில் ஜட்ஜ் என தமிழ் ரசிகர்களின் மத்தியில் பரிட்சயமானவர்.
கொல்கத்தாவில் தன் கணவர், மகன், மகளுடன் உஷா உதுப் வசித்து வந்த நிலையில் உஷா உதுப்பின் கணவர் ஜானி சாக்கோ உதுப் நேற்று திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
மேலும் படிக்க : Usha Uthup: இந்திய பாப் குயின், பாடகி உஷா உதுப்பின் கணவர் மாரடைப்பால் உயிரிழப்பு!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)