Ganesh Acharya : "98 கிலோ எடையை குறைச்சேன்.. இப்போ.." : "ஊம் சொல்றியா” புகழ் கணேஷ் ஆச்சார்யா பளிச்..
முன்னணி பாலிவுட் நடன இயக்குநரான கணேஷ் ஆச்சார்யா ஹீரோவாக விரைவில் அறிமுகமாக உள்ள நிலையில், தன் புதிய படத்துக்காக 98 கிலோ எடையைக் குறைத்துள்ளார்.
![Ganesh Acharya : Choreographer Ganesh Acharya lost 98 kgs for his debut bollywood movie Ganesh Acharya :](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/23/0a7f5fb5427460b14eb49b61d6c6f0e7_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பாலிவுட்டின் முன்னணி நடன இயக்குநர்களில் ஒருவர் கணேஷ் ஆச்சார்யா. பிரபுதேவா நடித்து பாலிவுட்டில் ஹிட்டான ’ABCD: Any Body Can Dance’ என்ற படத்தில் இவர் அறிமுகமானார்.
தொடர்ந்து, சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியான ’பாஜிராவ் மஸ்தானி’ படத்தில் இடம்பெற்ற ’மல்ஹாரி’ என்ற பாடலுக்கு இவர் நடன இயக்கம் செய்து வெளியான நடனம் பலத்த வரவேற்பைப் பெற்றது.
View this post on Instagram
இதையும் படிங்க: Fahadh Faasil : உதயநிதியுடன், பஹத் ஃபாசில்.. மாமன்னன் ஷூட்டிங்கில் திடீர் சர்ப்ரைஸ்..
தொடர்ந்து பல பாடல்களுக்கும் நடன இயக்குநராகப் பணியாற்றிவந்த நிலையில், தற்போது கணேஷ் ஆச்சாரியா பாலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.
’தேஹாதி டிஸ்கோ’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்துக்காக இவர் தன் உடல் எடையை பெருமளவு குறைத்து ஃபிட்டாக மாறியுள்ளார்.
இந்நிலையில், இப்படம் குறித்த தனது பணி அனுபவத்தையும், தான் உடல் எடையைக் குறைத்த பயணம் பற்றியும் கணேஷ் தற்போது பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
”இப்படத்துக்காக நான் 98 கிலோ எடையைக் குறைத்துள்ளேன். எடையைக் கட்டுக்குள் கொண்டு வந்த பிறகு பெரும் உற்சாகத்துடன் வலம் வருகிறேன். என் வாழ்வின் இந்தத் தருணத்தில் நிறைய வேலை செய்யவும், நடிக்கவும் நான் விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திரைப்படத்துறையை பிரிப்பது எனக்குப் பிடிக்கவில்லை! - நடிகர் அக்ஷய் குமார்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)