Chiyaan Vikram New Look: தங்கலான் கெட் அப்புக்கு Bye Bye... இது பீமா பட லுக்... புது லுக்கில் அசத்தும் விக்ரம்!
பொன்னியின் செல்வன் படம் தொடங்கி, தங்கலான் என தொடர்ந்து லாங் ஹேர் கெட் அப்பில் லைக்ஸ் அள்ளி வந்த விக்ரமின் இந்த புது லுக் அவரது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் விக்ரம் தன் நியூ லுக் புகைப்படங்களைப் பகிர்ந்து இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறார்.
நடிகர் விக்ரம் நடித்து முடித்துள்ள தங்கலான் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் தற்போது நடைபெற்று வருகின்றன.
தமிழர்களை அடிப்படையாகக் கொண்ட உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி பா. ரஞ்சித் இயக்கியுள்ள சரித்திரக் கதை ‘தங்கலான்’. நடிகர் விக்ரம் முதன்முதலாக இப்படத்தில் பா.ரஞ்சித் உடன் கைக்கோர்த்த நிலையில், மாளவிகா மோகனன், பார்வதி திருவோத்து, பசுபதி உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைக்கும் நிலையில், ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
சுமார் 100 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், கோலிவுட் வட்டாரத்தில் இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தை ஆஸ்கர் விழாவுக்கு அனுப்ப ஏற்பாடுகள் அடைபெற்று வருவதாகவும், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இப்படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் தொடர்ந்து தகவல்கள் வெளிவருகின்றன.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக நீண்ட தலைமுடியுடன் இப்படத்தின் அசத்தலான கெட் அப்பில் வலம வந்த விக்ரம் தற்போது முடியை முழுவதுமாக வெட்டி, பீமா பட லுக்குக்கு மாறியுள்ளார்.
View this post on Instagram
பொன்னியின் செல்வன் படம் தொடங்கி, தங்கலான் என தொடர்ந்து லாங் ஹேர் கெட் அப்பில் லைக்ஸ் அள்ளி வந்த விக்ரமின் இந்த புது லுக் அவரது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.