![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Chithha Box Office: சித்தா படத்திற்கு தொடரும் வரவேற்பு - பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?
Chithha Box Office: அருண் குமார் இயக்கியிருக்கும் ‘சித்தா’, பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் தொடர் நிகழ்வுகளை உணர்ச்சிகரமான ஒரு கதையாக சொல்லியிருக்கிறார்.
![Chithha Box Office: சித்தா படத்திற்கு தொடரும் வரவேற்பு - பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Chithha Box Office Collection 11.5 Crores and Extended Screen Time Chithha Box Office: சித்தா படத்திற்கு தொடரும் வரவேற்பு - பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/03/28add07bb829aca679ddfd35d8ca43d61696350688246333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அருண் குமார் இயக்கத்தில் சித்தார்த், நிமிஷா சஜயன் நடித்து வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘சித்தா’ பாக்ஸ் ஆபிஸில் இதுவரை உலக அளவில் ரூ.11.5 கோடியை வசூல் செய்துள்ளது.
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் குமார் இயக்கியிருக்கும் ‘சித்தா’, பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் தொடர் நிகழ்வுகளை உணர்ச்சிகரமான ஒரு கதையாக சொல்லியிருக்கிறார். இதில் சித்தார்த்தின் நடிப்பும் நன்றாகவே வொர்க்கவுட் ஆகியிருக்கிறது.
உணர்ச்சிகள் ததும்பும் கதை
தனது அண்ணன் இறந்த பின் அவரது மகளான சுந்தரியை தனது அண்ணியுடன் சேர்ந்து வளர்த்து வருகிறார் ஈஸ்வரன் ( சித்தார்த்). ஈஸ்வரனின் பள்ளிப் பருவத்துக் காதலியாக வருகிறார் சக்தி ( நிமிஷா சஜயன்) சந்தர்ப்ப சூழ்நிலையால் இவர்களின் காதல் பிரிந்துவிட, மீண்டும் தங்களது உறவை புதுப்பித்துக் கொள்கிறார்கள்.
இதனிடையில் தனது நண்பன் வடிவேலுவின் அக்கா மகளான பொன்னியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஈஸ்வரன் மீது பழி வருகிறது. இந்தப் பிரச்சனைகளுக்கு மத்தியில் முதல் பாதி நிற்க, பெண் குழந்தைகளை கடத்திச் சென்று அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யும் ஒருவன் சுந்தரியைக் கடத்திச் செல்கிறான். இந்தக் குற்றவாளியை அடையாளம் கண்டு சுந்தரியை தேடும் த்ரில்லராக இரண்டாம் பாதி தொடர்கிறது. கதையில் விறுவிறுப்பும் சித்தார்த்தின் நடிப்பும் சுவாரஸ்யமானதாக இருக்கிறது.
திரையரங்க காட்சிகள் அதிகரிப்பு
‘சித்தா’ படத்துக்கு தொடர்ந்து வரவேற்பு அதிகரித்து வருவதால் அப்படத்துக்காக காட்சிகளை திரையரங்க நிர்வாகங்கள் அதிகரித்துள்ளன. கடந்த மாதம் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து நேர்மறை விமர்சனங்களை பெற்று வருகிறது. ‘சித்தா’ படம் தொடர்பாக பாசிட்டிவ் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பரவியதால் சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள திரையரங்க நிர்வாகங்கள் ’சித்தா’ படத்துக்கான காட்சிகளை அதிகரித்துள்ளன.
தொடரும் வசூல் வேட்டை
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)