Vijayakanth: "எனக்கு கிரிக்கெட் தெரியாது; கபில்தேவ், டெண்டுல்கர் ஜெயிக்கனும் நினைச்சேன்" - விஜயகாந்த் வைரல் வீடியோ!
Vijayakanth: விஜயகாந்த் மறைவு குறித்து ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் அவர் பேசிய வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் தன்னிகரில்லா நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் இல்லை என்பதை ஏற்றுக்கொள்வதில் பலருக்கும் மிகவும் கடினமானதாக உள்ளது.
இந்தியா ஜெயிக்கனும்:
கிர்க்கெட் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எண்ணம் எல்லாம் என்ன? இந்தியா ஜெயிக்கனும்னு ஒரு ஒரு எண்ணம் மட்டும்தான் இருக்கும். கிரிக்கெட் எனக்கு ரேடியோல கேட்டுத்தான் பழக்கம். அப்போதான் முதன் முதலில் மெட்ராஸ் வரேன். கபில் தேவ் பற்றி ரேடியோல நிறைய பேசி கேட்டுக்கேன். எனக்கு கபில் தேவ் ரொமப்வே பிடிக்கும். கபில் தேவ் விக்கெட் எடுக்கிறார்; அடிக்கிறார். அப்பறம் டி.வி-யின் வருகைக்குபிறகு தான் தெரியும். டெண்டுல்கர்ன்னு ஒருத்தர் இருக்கார். அவரும் நல்லா விளையாடுவாரு தெரியும். அப்போதுதான் ஆர்வம் வந்துச்சு. மிட் -ஆஃப், மிட் ஆன் அதெல்லாம் எனக்குத் தெரியாது. டெண்டுல்கர் நல்லா அடிக்கனும். ஜெயிக்கனும். இந்தியா ஜெயிக்கனும் . அதுமட்டும் எண்ணமாக இருக்கும்.” என்று பேசியுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகிவருகிறது.
ஒண்ணுமே தெரியாம தெரிஞ்ச மாறி காட்டுற ஆளுங்க மத்தியில....இப்படி வெளிப்படையாக தெரியலனு சொல்லுறதே பெரிய மனசு தான் கேப்டன்... pic.twitter.com/zHUsRUUD6t
— Rajini (@rajini198080) December 30, 2023
’நடிகர், பிரபலம் ஒருவர் தனக்கு தெரியாது என்பதை வெளிப்படையாக சொல்வதற்கு எவ்வளவு மனதிடம் வேண்டும். அப்படிபட்ட மாண்புமிக்க மனிதர்.’ தன் இயல்பை மக்களிடம் காட்டியவர்.’ என்று குறிப்பிட்டு பலரும் இந்த வீடியோவை பகிந்து வருகின்றனர். ‘ஒண்ணுமே தெரியாம தெரிஞ்ச மாறி காட்டுற ஆளுங்க மத்தியில....இப்படி வெளிப்படையா தெரியதுனு சொல்லுறதே பெரிய மனசு தான் கேப்டன்..” என்று ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாகுபாடு பார்க்காதவர் :
சிறு வயது முதலே மேல மாசி வீதியில் இருக்கும் பள்ளிவாசலுக்கு சென்ற பழக்கத்தால் இஸ்லாமியர்களுடன் நெருங்கி பழகிய விஜயகாந்த், கிறிஸ்தவ ஆலயங்களுக்கு சென்று வழிபடுவதையும் வழக்கமாகக் கடைபிடித்து வந்துள்ளார்.
“அவரவரின் மத வழிபாடு அவர் அவருக்கு மிகவும் முக்கியமானது, அதை மற்றவர்கள் இழிவுபடுத்தக் கூடாது” என்பது தான் கேப்டனின் நோக்கம். அதனால் விஜயகாந்த் என்றுமே எம்மதமும் சம்மதமாக வாழ்ந்தவர். அதனால் தான் அவரை ஜாதியின்றி மதமின்றி பாகுபாடு இன்றி அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடினார்கள். மனிதர்களுள் எந்த வகையிலும் வேற்றுமை பார்க்காத, மனித நேயம் கொண்ட விஜயகாந்துக்கு இரங்கல் தெரிவிப்பவர்களும் இதையே தொடர்ந்து கண்ணீர்மல்க பறைசாற்றி வருகிறார்கள்.
அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜயகாந்தை கடைசியாக காண தமிழ்நாடு முழுவதும் இருந்து மக்கள் சென்னை வந்து அஞ்சலி செலுத்தினர். சமூக வலைத்தளங்கள் வாயிலாக அவரது பிரிவின் துயரை வெளிப்படுத்தி வருகின்றனர்.