Captain Miller OTT: ஓடிடிக்கு வரும் தனுஷின் கேப்டன் மில்லர்: எந்தத் தேதி, ஓடிடி தளம்? முழு விபரம்!
Captain Miller OTT Release: தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான கேப்டன் மில்லர் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ் நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இந்த ஆண்டு பொங்கல் ரிலீசாக வெளியான திரைப்படம் கேப்டன் மில்லர் (Captain Miller).
கலவையான விமர்சனங்கள்
ஜனவரி 12ஆம் தேதி வெளியான இப்படத்தில், பிரியங்கா மோகன், ஷிவராஜ் குமார், சந்தீப் கிஷன், நிவேதா சதீஷ், அதிதி பாலன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜி.வி பிஷகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்த நிலையில், சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்திருந்தது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பெரும் பொருட்செலவில் உருவான இப்படம், கலவையான விமர்சனங்களையே பெற்றது. மேலும் இப்படத்தின் கதை தன்னுடைய புத்தகத்தில் இருந்து திருடப்பட்டது என பிரபல நடிகரும் எழுத்தாளருமான வேல. ராமமூர்த்தி குற்றம் சாட்டியது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் ஆலய நுழைவு போராட்டம் உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகள் குறித்து கேப்டன் மில்லர் பேசினாலும், இரண்டாம் பாதி ஒன்றவைக்கவில்லை, இழுவை என ரசிகர்கள் கமெண்ட் தெரிவித்து வந்தனர்.
ஓடிடி ரிலீஸ் தேதி
மற்றொருபுறம் சுமார் 50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம், திரையரங்குகளில் ரூ.71.28 கோடிகளை மட்டுமே இதுவரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வரும் பிப்.09ஆம் தேதி கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
what makes a soldier go rogue? the answer lies in Miller’s journey#CaptainMillerOnPrime, Feb 9 @dhanushkraja @priyankaamohan @ArunMatheswaran @gvprakash @NimmaShivanna @sundeepkishan @SathyaJyothi pic.twitter.com/EknEyYNW7O
— prime video IN (@PrimeVideoIN) February 2, 2024
கடந்த ஜனவரி 26ஆம் தேதி தெலுங்கில் டப் செய்யப்பட்டு கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
டஃப் கொடுத்த அயலான்
மற்றொரு புறம் இந்த ஆண்டு பொங்கல் ரேஸில் தனுஷுக்கு போட்டியாகக் களமிறங்கிய சிவகார்த்திகேயனின் அயலான் அதன் புது முயற்சிகளுக்காக வரவேற்பைப் பெற்றது. ஏலியனை மையப்படுத்தி வெளியான இப்படமும் கதை ரீதியாக கலவையான விமர்சனங்களைப் பெற்றும், குழந்தை ஆடியன்ஸ்களைக் கவர்ந்தும் வரவேற்பைப் பெற்றது. ரூ.75 கோடிகளை அயலான் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், வரும் பிப்ரவரி 16ஆம் தெதி சன் நெக்ஸ்ட் தளத்தில் அயலான் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாக உள்ளது.
இந்நிலையில், கேப்டன் மில்லர், அயலான் என இரு படங்களுமே அடுத்த பாகத்துக்கான லீட் கொடுத்து முடிக்கப்பட்டுள்ள நிலையில், நெகட்டிவ் விமர்சங்களை சரிசெய்து அடுத்தடுத்த பாகங்களை இரு படக்குழுக்களும் தயாரிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
மேலும் படிக்க: Poonam Pandey Death: நடிகை பூனம் பாண்டே புற்றுநோயால் உயிரிழப்பு: அதிர்ச்சியில் ரசிகர்கள்!