Thalapathy Vijay | அவர் ரொம்ப கூல் - தளபதி விஜயை பாராட்டிய பாலிவுட் சூப்பர்ஸ்டார்
தளபதி விஜய் குறித்து ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு நச்சென்று பதில் அளித்துள்ளார் பிரபல நடிகர் ஷாருக் கான்.
கேமியோ ரோல்களை தவிர தளபதி விஜய் பிற மொழி படங்களில் இதுவரை நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் விஜய்க்கு பிற மொழிகளிலும் ரசிகர்கள் கூட்டம் அதிகம். தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்கமுடியாத நாயகர்களின் பட்டியலில் பல ஆண்டுகளுக்கு முன்பே தடம் பதித்த தளபதி விஜய் 1984-ஆம் ஆண்டு கேப்டன் விஜயகாந்தின் வெற்றி என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அந்த படத்தின் இயக்குநர் விஜயன் தந்தை எஸ்.ஏ.சி.சந்திரசேகர் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தை இயக்குநர் என்றபோதும் தொடக்ககாலத்தில் நடிகர்கள் சந்திக்கும் பல பிரச்சனைகளையும் இன்னல்களையும் தளபதி விஜயும் சந்தித்தார். இந்த மூஞ்சியெல்லாம் ஹீரோவா என்று கேலிசெய்யப்பட்ட அதே விஜய், இளைய தளபதியாக மாறி இன்று தளபதியாக உருமாறி நிற்கின்றார்.
Very cool https://t.co/bFjbEgmeij
— Shah Rukh Khan (@iamsrk) June 25, 2021
90-களின் இறுதியில் இருந்து இன்று வரை பல சூப்பர் ஹிட் படங்களை கொடுக்கும் ஹீரோக்கள் பலர் தமிழ் சினிமாவில் அறிமுகமானபோதும் தனக்கென தனி இடத்தை தக்கவைத்துக்கொண்டே இருக்கிறார் நடிகர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது. செண்டிமெண்ட், நகைச்சுவை, ஸ்டண்ட் என்று கலைகள் பல கற்ற விஜய் சிறந்த பாடகர் என்பதும் உலகம் அறிந்ததே. தற்போது இந்த சைலன்ட் கில்லர் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படம் தான் டாக் of டவுன் என்றால் மிகையல்ல. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் இரண்டு போஸ்டர்கள் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி பட்டையை கிளப்பிவருகின்றது.
இந்நிலையில் இந்திய சினிமாவின் அடையாளம் என்று கூறப்படும் பாலிவுட் உலகின் அடுத்த ஷாஇன்ஷா ஷாருக்கான், தளபதி விஜய் குறித்து ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார். பொதுவாக ஷாருக் #AskSrk என்ற தலைப்பில் தனது ரசிகர்களின் கேள்விக்கு தனது ட்விட்டர் மூலம் பதில் அளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் ரசிகர் ஒருவர் தளபதி விஜய் குறித்து ஒரு வார்த்தையில் கூறுங்கள் என்று கேட்டதற்கு very cool என்று பதிலளித்து விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். விஜய் பிற மொழி படங்களில் நடித்ததில்லை என்றபோது பிற மொழி ரசிகர்கள் மற்றும் நடிகர்களை அவர் மிகவும் கவர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தளபதி விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வெகு சிறப்பாக உருவாகி வருகின்றது. மேலும் அவரது 66வது படம் குறித்த சில தகவல்களும் அவ்வப்போது இணையத்தில் வலம்வருகின்றது. பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் வம்சி பைடிபள்ளியின் அடுத்த படத்தில் பணியாற்ற நடிகர் விஜய் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. தளபதி 66-ஆக உருவாகவுள்ள இந்த படத்தை ராஜு தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.