
Amitabh Bachchan : பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி... என்ன ஆச்சு?
Amitabh Bachchan: நடிகர் அமிதாப் பச்சன் பலத்த பாதுகாப்புடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் திரையுலகின் ஜாம்பவான் என ஒட்டுமொத்த இந்தியாவே கொண்டாடும் நடிகர் அமிதாப் பச்சன். 80 வயதை கடந்தும் இன்றும் திரைப்படங்களில் நடித்து தன்னுடைய ரசிகர்களை உற்சாக படுத்தி வருகிறார்.
இந்நிலையில் மெகா ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை மருத்துவமனையில் பலத்த பாதுகாப்புடன் அனுமதிக்கப்பட்டார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்த தகவல் பாலிவுட் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகத்தினரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இரத்த நாளத்தை விரிவடைய செய்யும் பலூன் சிகிச்சை தான் ஆஞ்சியோபிளாஸ்டி என அழைக்கப்படுகிறது. நடிகர் அமிதாப் பச்சனுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை இதயத்தில் செய்யப்படவில்லை என்றும் அவரின் கால்களில் சில இடங்களில் ரத்தக்கட்டுக்கள் இருக்கும் இடத்தில் செய்யப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று அதிகாலையே அவர் மருத்துவமனையில் அனுமதிப்பட்டு இருந்தாலும் தற்போது தான் தகவல் வெளியாகியுள்ளது. இந்த இடைப்பட்ட நேரத்தில் அமிதாப் பச்சன் இன்று மதியம் தன்னுடைய எக்ஸ் தள பக்கம் மூலம் 'நன்றியை தெரிவித்து கொள்கிறேன்' என ட்வீட் செய்துள்ளார்.
நடிகர் அமிதாப் பச்சன் தீவிர ரசிகர்கள் இந்த தகவலறிந்து சோசியல் மீடியா பக்கம் மூலம் பிரார்த்தனைகளை தெரிவித்து வந்தார்கள். விரைவில் அவர் குணமடைந்து வீடு திரும்ப வாழ்த்துக்களை தெரிவித்து வந்தார்கள்.
அந்த வகையில் தற்போது அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அமிதாப் பச்சன் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் 'கல்கி 2989 AD' படத்திலும் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் 'வேட்டையன்' படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

