மேலும் அறிய

Ajithkumar: அஜித்துடன் மீண்டும் நடிக்கனும்... விஜய் பட வில்லன் வித்யுத் ஜம்வாலின் ஆசை இதுதான்!

மதராஸி பட வில்லன் வித்யுத் ஜம்வால் அஜித்துடன் மீண்டும் இணைந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் வித்யுத் ஜம்வால். தமிழில் இவர் வில்லனாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார். கட்டுக்கோப்பான உடல், அசாத்தியமான சண்டைக் காட்சிகள் காரணமாக இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

அஜித்துடன் நடிக்க ஆசை:

தமிழில் பில்லா 2 படம் மூலமாக வில்லனாக அறிமுகமானார். பின்னர், துப்பாக்கியில் விஜய்க்கு வில்லனாக நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார். பின்னர். அஞ்சானில் நடித்தார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் மதராஸியில் மீண்டும் வில்லனாக நடித்து அசத்தியுள்ளார். 

இந்த சூழலில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய வித்யுத் ஜம்வாலிடம், தமிழில் உங்களுக்கு யாருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று ஆசை? என்று கேட்கப்பட்டது. 

அதற்கு பதில் கூறிய வித்யுத் ஜம்வால், என்னுடைய மதிப்பிற்குரிய அஜித் சாருடன் இணைந்து நான் மீண்டும் பணியாற்ற விரும்புகிறேன். நான் ஒரு முன்னணி நடிகராக வருவதற்கு முன்பு, பில்லா படத்தின்போது அஜித் எனக்கு வழிகாட்டியாக இருந்தார். மற்றொன்றும் சொல்ல வேண்டும் அவர் அருமையான மனிதர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பில்லா 2:

அஜித் நடிப்பில் கடந்த 2012ம் ஆண்டு வெளியான படம் பில்லா 2.  ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில் உருவாகிய இந்த படத்தில் அஜித்திற்கு வில்லனாக வித்யுத் ஜம்வால் தமிழில் அறிமுகமானார். பில்லா படத்தின் முந்தைய பாகமாக இந்த படத்தை படத்தின் இயக்குனர் சக்ரி டோலட்டி உருவாக்கியிருப்பார். 

வித்யுத் ஜம்வால் டிமித்ரி என்ற சர்வதேச ஆயுத கடத்தல்வாதியாக இந்த படத்தில் நடித்திருப்பார். இந்த படத்தின்போது அஜித்திற்கும், வித்யுத் ஜம்வாலுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட்டது. தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களே அவருக்கு வந்து கொண்டிருந்த நிலையில், கமாண்டோ படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். பின்னர் தொடர்ந்து கமாண்டோ 2, ஜங்லி, யாரா என பல படங்களில் நடித்தார்.

தற்போது ஹாலிவுட்டில் ஸ்ட்ரீட் ஃபைட் என்ற படத்தில் நடித்து வருகிறார். சரியான கதையம்சம் அமைந்தால் தமிழில் தொடர்ந்து நடிக்க உள்ளார். 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே படத்தின் ஒரு டிக்கெட் ரூ.4,000! அதிர்ச்சியில் ரசிகர்கள்
அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே படத்தின் ஒரு டிக்கெட் ரூ.4,000! அதிர்ச்சியில் ரசிகர்கள்
திருநெல்வேலியில் த்ரிஷா நற்பணி இயக்கம் தொடக்கம்...விஜயுடன் இணைந்து போட்டியிட விருப்பம்
திருநெல்வேலியில் த்ரிஷா நற்பணி இயக்கம் தொடக்கம்...விஜயுடன் இணைந்து போட்டியிட விருப்பம்
இயக்குநர் நெல்சனின் தந்தை யார் தெரியுமா?சீரியல் நடிகர் வின்சண்ட் ராய் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்
இயக்குநர் நெல்சனின் தந்தை யார் தெரியுமா?சீரியல் நடிகர் வின்சண்ட் ராய் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்
அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா பற்றி அவதூறு பேச்சு! பயில்வான் ரங்கநாதனிடம் சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா பற்றி அவதூறு பேச்சு! பயில்வான் ரங்கநாதனிடம் சைபர் கிரைம் போலீஸ் விசாரணை

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் தொடரும் மழை.. இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடரும் மழை.. இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சர்ச்சைக்கு பின் மீண்டும் தேடிவந்த தலைமைப்பதவி - Nvidia தலைவர், சி.இ.ஓவாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமனம்!
சர்ச்சைக்கு பின் மீண்டும் தேடிவந்த தலைமைப்பதவி - Nvidia தலைவர், சி.இ.ஓவாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமனம்!
ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய எச்சரிக்கை! பம்பையில் ஆடைகளை வீசினால் கடும் நடவடிக்கை!
ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய எச்சரிக்கை! பம்பையில் ஆடைகளை வீசினால் கடும் நடவடிக்கை!
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (24-11-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது ? - மின் வாரியம் வெளியிட்ட முழு லிஸ்ட்
தமிழகத்தில் நாளை (24-11-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது ? - மின் வாரியம் வெளியிட்ட முழு லிஸ்ட்
”சாதி சீன்களால் பல பிரச்சனைகள்” கமலுக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம் - போலீஸ் அனுமதி வழங்குமா?
”சாதி சீன்களால் பல பிரச்சனைகள்” கமலுக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம் - போலீஸ் அனுமதி வழங்குமா?
சபரிமலையில் அதிர்ச்சி! கடந்த ஆண்டை விட அரவணை விற்பனை கடும் சரிவு!
சபரிமலையில் அதிர்ச்சி! கடந்த ஆண்டை விட அரவணை விற்பனை கடும் சரிவு!
இரவு 10 மணிவரை பொளக்கப்போகும் மழை! - நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை?

Embed widget