விஜய்-நெல்சனை பங்கமாய் கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்: கடுப்பான தளபதி ரசிகர்கள்!
Blue Sattai Maran: ‛‛விக்ரம் படம் ஹிட் ஆனதால் லோகேஷிற்கு கார் பரிசு கிடைத்ததைப் போல, பீஸ்ட் படம் ஹிட் ஆகியிருந்தால்...’’
பரபரப்பான திரை விமர்சனங்களால் தன் பக்கம் கவனத்தை ஈர்த்தவர் ப்ளூ சட்டை மாறன். அனைத்து படங்களை விமர்சனம் செய்தது மட்டுமல்லாமல், ஆண்ட் இண்டியன் என்கிற படத்தை இயக்கி, அதன் மூலம் பாராட்டையும் பெற்றார். தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களையும், நடிப்பையும் கடுமையாக சாடி வரும் ப்ளூ சட்டை மாறன், சமீபத்தில் வெளியான நடிகர் அஜித்தின் வலிமை மற்றும் விஜய் நடித்த பீஸ்ட் படங்களை கடுமையான சாடியிருந்தார்.
இதனால் சம்மந்தப்பட்ட நடிகர்களின் ரசிகர்களால் கடுமையான விமர்சனங்களையும், மிரட்டல்களையும் சந்தித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் கமல், சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாஃசில் நடித்த விக்ரம் படம் பற்றி வழக்கமான கிண்டலுக்கு மத்தியில் பொருத்தமான விமர்சனத்தை செய்திருந்தார். விக்ரம் படம், பல இடங்களில் பாராட்டை பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற வருகிறது.
இந்த வெற்றியால் மகிழ்ந்த படத்தின் தயாரிப்பாளரான கமல், இயக்குனர் லோகேஷ் கனகராஜை சந்தித்து வாழ்த்து கூறியதுடன், லக்ஸஸ் கார் ஒன்றை பரிசளித்து அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். நேற்று முழுவதும் இது தான் பேசும் பொருளாக இருந்தது.
இந்நிலையில், ப்ளூ சட்டை மாறன், தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு போட்டோவை இன்று பதிவு செய்துள்ளார். அதில், நடிகர் விஜய், இயக்குனர் நெல்சனுக்கு ரபேல் விமானத்தை பரிசளிப்பது போன்று போட்டோ ஷாட் செய்யப்பட்ட படத்தை பகிர்ந்துள்ளார். கமல்-லோகேஸ் போட்டோவை அப்படியே மாற்றி, ப்ளூ சட்டை மாறன் செய்துள்ள இந்த ரகளையில்,
‛ஒருவேளை பீஸ்ட் ஹிட்டாகி இருந்தால்’
ஒருவேளை பீஸ்ட் ஹிட்டாகி இருந்தால்.. pic.twitter.com/IHQ4GRE65l
— Blue Sattai Maran (@tamiltalkies) June 8, 2022
என்று அந்த பதிவில் ப்ளூ சட்டை மாறன் குறிப்பிட்டுள்ளார். விக்ரம் படம் ஹிட் ஆனதால் லோகேஷிற்கு கார் பரிசு கிடைத்ததைப் போல, பீஸ்ட் படம் ஹிட் ஆகியிருந்தால், அந்த படத்தின் அதிகம் விமர்சிக்கப்பட்ட விமானம் ஓட்டும் காட்சியை கிண்டலடித்து, நெல்சனுக்கு ரபேல் விமானத்தை விஜய் வழங்கியிருப்பார் என்று அதில் ப்ளூ சட்டை மாறன் சித்தரித்துள்ளார்.
அவ்வளவு தான்... விஜய் ரசிகர்கள் கட்டி ஏறி, ட்விட்டரில் மாறனுடன் சண்டை போட்டுக்கொண்டிருக்கின்றனர். ஏதாவது ஒரு வகையில் ட்விட்டர் உலகம், போரை சந்தித்துக் கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் இன்று ப்ளூ சட்டை மாறன், தன் பங்கை துவக்கியுள்ளார்.
Ivaru oru Publicity Paithiyam
— Deepan Chakravarthy (@DChakaravathi) June 8, 2022
Ivuru appdiye nalla padam eduthu kattitaru ithula mathavagala koora solluraru
Unngala periya hero padathula oru mukkiya character la nadika vechu atha padathaa neegale review panna sonna eppadi pannivigalnu na pakkanum
ஆன்டி இந்தியன் வெற்றி பெற்றிருந்தால் நீங்க என்ன வாங்கி இருப்பீங்க அண்ணே
— Iamnotpseudosecular 🇮🇳 (@Imnotpseudosecu) June 8, 2022
“ அப்ப ஒரு வேலை ஆன்டிஇன்டியன் ஹிட்டாகி இருந்தா நீ செத்துருப்பியோ “ ச்சை நல்ல வாய்ப்ப விட்டோமே🤦🏻♂️🤦🏻♂️
— Prasath 🖱🖥💻 (@Prasathdhruv) June 8, 2022