BiggBoss Tamil: வாயை உடைச்சுடுவேன்.. பார்வதியை சாடிய திவ்யா.. எல்லைமீறிய பிக்பாஸ் நிகழ்ச்சி
VJ Parvathy vs Divya Ganesan : பிக்பாஸ் நிகழ்ச்சியின் கார் டாஸ்கில் மிகவும் மூர்க்கத்தனமாக நடந்துக் கொண்ட கம்ருதீனையும்,பார்வதியையும் சக போட்டியாளரான திவ்யா கணேசன் கடுமையாக சாடினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கார் டாஸ்க் நடைபெற்ற நிலையில் அதில் போட்டியாளர்கள் வரம்பு மீறி நடந்து கொண்டது பார்வையாளர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் கார் டாஸ்க் நடைபெற்றது. இதில் சாண்ட்ராவை சக போட்டியாளர்களான பார்வதி மற்றும் கம்ருதீன் இணைந்து காரில் இருந்து வெளியே தள்ளிய காட்சிகள் அரங்கேறியது. இது மற்ற போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் பார்வையாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பார்வதி மற்றும் கம்ருதீன் இருவரையும் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் விஜய் சேதுபதிக்கு கோரிக்கை பறந்த வண்ணம் உள்ளனர்.
இப்படியான நிலையில் சாண்ட்ராவை பொறுமையிழக்க செய்து அவரை காரில் இருந்து தள்ளிய பிறகு உடல்நலக்குறைவால் அவதிப்பட்டார். அவருக்கு வலிப்பு வந்து விட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாண்ட்ராவின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Divya fighting and staying there for the 2 girls like a protective elder sister!
— Ramya (@lovetheshowPLL) January 2, 2026
Queen energy!! ❤️🔥
I cannot love you more woman!! 👑❤️#BiggBossTamil9 #BiggBoss9Tamil pic.twitter.com/UVEoPPpDE9
இப்படியான நிலையில் சாண்ட்ராவை தள்ளி விட்டு ஏதையோ சாதித்ததைப் போல பார்வதி மற்றும் கம்ருதீன் நடந்து கொண்டனர். அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது நடிப்பதாக கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இது சக போட்டியாளர்களை மேலும் கோவப்படுத்தியது. விக்ரம், சபரி இருவரும் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி கம்ரூதினை வறுத்தெடுத்தனர்.
தொடர்ந்து பார்வதி தனியாக சிக்க அவரை திவ்யா, அரோரா, சுபிக்ஷா உள்ளிட்டோர் சரமாரியாக விமர்சித்தனர். திவ்யா பேசும்போது, “உன்னை மாதிரி ஒரு பெண்ணை என் வயசுல நான் பார்த்ததே இல்ல. நீ என்னென்ன பண்ணிட்டு வந்திருக்க என நான் வைல்ட் கார்டு எண்ட்ரீல பார்த்துட்டு தான் வந்துருக்கேன். அதெல்லாம் நான் சொல்லக்கூடாதுன்னு இருக்கேன். உங்க அம்மாகிட்ட போய் கேளு. 24 மணி நேரம் இந்த வீட்டுல இருந்து ஒரு கிளாஸ் எடுத்து திருந்தாத நீ, நான் சொன்னா மட்டும் திருந்தவா போற?, எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு. நீ வாயை மூடிட்டு இரு. போடின்னு சொன்னா வாயை உடைச்சிடுவேன். பத்து வருஷம் நீ என்ன பண்ணிட்டு இருந்தேன்னு எனக்கு தெரியும்" என கடுமையாக சாடியுள்ளார்.
மேலும் நீ யாரையாவது காரில் இருந்து தள்ளி விட்டு பாரு. உன்னை என்னை பண்ணுவேன்னு தெரியாது எனவும் திவ்யா பேசியது இது மக்கள் பார்க்கும் நிகழ்ச்சி தானா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.




















