Biggboss Tamil 9 : விஜய் சேதுபதியை எதிர்த்து பேசிய போட்டியாளர், இந்த வார எவிக்ஷனில் அவுட்
Biggboss Tamil 9 : பிக்பாஸ் தமிழின் இந்த வார எவிக்ஷனில் கடந்த வாரம் விஜய் சேதுபதியுடன் வாக்குவாதம் செய்த பிரஜின் வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

பிக்பாஸ் வார இறுதி எபிசோட் இன்று சென்னை ஈசிஆரில் இன்று நடைபெற்று வருகிறது. சனி ஞாயிறுக்கான எபிசோட் இன்று படம்பிடிக்கப்பட்டு வருகிறது. இப்படியான் நிலையில் இந்த வார எவிக்ஷனில் வெளியேறிய போட்டியாளர் பிரஜின் என தகவல் வெளியாகியுள்ளது . இது ரசிகர்கள் பலருக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. குறிப்பாக கடந்த வாரம் விஜய் சேதுபதியுடன் சரிக்கு சரி வாதம் செய்ததால் தான் பிரஜி வெளியேற்றப்பட்டாரா என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பியுள்ளார்கள்.
பிக்பாஸ் இந்த வார எவிக்ஷன்
பிக்பாஸ் தமிழின் 9 ஆவது சீசன் 59 ஆவது நாளை எட்டியுள்ளது. கடந்த வாரம் எவிக்ஷன் தவிர்க்கப்பட்டு புதிதாக ஆதிரை பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார். இதனால் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடக்கும் என பலரும் எதிர்பார்த்து வந்தனர். சுபிக்ஷா மற்றும் எஃப்ஜே இந்த வாரம் வெளியாவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த வாரம் டவுள் எவிக்ஷன் இல்லை என்றும் பிரஜின் மட்டும் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் தகவல் வெளியாகியுள்ளது.
வெளியேறிய பிரஜின்
வைல்டு கார்டு என்ட்ரியில் பிரஜின் மற்றும் அவரது மனைவி சான்ட்ரா ஆகிய இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தனர். கணவன் மனைவிகளாக வந்தவர்கள் வீட்டிற்குள் வந்த பின்னும் கணவன் மனைவியாக இருந்ததே அவர்களுக்கு பெரிய மைனஸாகிவிட்டது. எதிரெதிர் அணியில் இருந்தாலும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்துகொள்வது பிக்பாஸ் வீட்டிலுள்ள மற்ற போட்டியாளர்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியது
பிரஜின் வாக்குவாதம் செய்ததால் வெளியேற்றப்பட்டாரா ?
கடந்த வாரம் மற்ற போட்டியாளர்களை கண்டித்தது போல் பிரஜினையும் கண்டித்தார். இதற்காக பிரஜின் மற்றும் விஜய் சேதுபதி இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. " சண்ட போடுனு சொல்றீங்க ஆனா சண்ட போட்டா திட்டுறீங்க...உங்ககிட்ட நியாயமாக கேள்வி கேட்டால் என்னை கெட்டவனாக்குறீங்க' என பிரஜின் விஜய் சேதுபதியுடன் வாக்குவாதம் செய்தார். இதனால் கடுப்பான விஜய் சேதுபதி கோட்டை கழற்றி , நாற்காலியை தூக்கி எறிந்து நிகழ்ச்சியை விட்டு சென்றார். இந்த வாக்குவாதம் நடந்த அடுத்த வாரத்தில் பிரஜின் எலிமினேட் செய்யப்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





















