மேலும் அறிய

Bigg Boss 5 Tamil: ‘அது கேமே கிடையாது...உங்க பாசத்த வளர்க்க இங்க வரல’ - கடுப்பான கமல் 

இது தனியுரிமை அத்துமீறல் இல்லையா? உடை மாற்றும் அறையில் கேமரா வைத்ததற்கான காரணமே அதுதானே? சொல்லுங்க சுருதி என அவரைப் பார்த்துக் கேட்கிறார் கமல். 

பிக்பாஸ் சீசன் 5ன் வீக்கெண்ட் எபிசோடுக்கான இன்றைய தினத்தின் 3-வது புரோமோ வெளியாகியிருக்கிறது. கேட்டிருந்தா நாங்க கொடுத்திருப்போம் என்பதோ, தாமரைக்காக நாங்கள் எடுத்து வெச்சிருக்கோம் என்பதோ கேம் கிடையாது. உங்க பாசத்தையும் அன்பையும் வளர்க்க இங்க வரல. இது தனியுரிமை அத்துமீறல் இல்லையா? உடை மாற்றும் அறையில் கேமரா வைத்ததற்கான காரணமே அதுதானே? சொல்லுங்க சுருதி என அவரைப் பார்த்துக் கேட்கிறார் கமல். 

View this post on Instagram
 
A post shared by Vijay Television (@vijaytelevision)

இன்று வெளியான முதல் புரோமோவில் பொதுவெளியில் ஒப்புக் கொள்ள முடியாத எதையும் செய்யாதீர்கள் என பாவனியைக் கண்டிக்கிறார். உண்மை என்பது யாரைப் பார்த்து சொன்னாலும், விஷயம் ஒன்றாகத்தான் இருக்கும். நீங்க பேசும்போது நானும்- சுருதியும் காயினை எடுக்கத் திட்டமே போடலைங்கறீங்க. நாங்க பார்த்தது என்னன்னா? நீங்களும், அவங்களும் நான் இதை செய்யப் போகிறேன், இப்படி செய்யப் போகிறேன், அப்ப நீங்க எடுத்துக்கோங்கனு சொல்ற வரைக்கும் எல்லாரும் பார்த்தாங்க. ஆனாலும் அதை அப்படியே மறுக்கிறார் பாவனி. நாங்கள் இதை ப்ளேனே பண்ணல என அடித்துச் சொல்கிறார். நம்ம சொல்றது சரியா, இல்லையானு சந்தேகம் இருக்கறப்போதான் மாத்தி மாத்தி பேச வேண்டியிருக்கும்.பொதுவெளியில் ஒப்புக் கொள்ள முடியாத எதையும் செய்யாதீர்கள் என ஆங்கிலத்தில் குரலுயர்த்தி கண்டிக்கிறார் கமல். பாவனிக்கு கண்டிப்பாக இந்த வாரம் குறும்படம் உண்டு போல. 

வழக்கம்போலவே டிப் டாப்பாக உடை அணிந்து வந்துள்ளார் கமல் ஹாசன். இது விதியா, விதிவிலக்கா, விதியில இருக்கா?, விதிமீறலா, என் தலைவிதியா அப்படின்னு கூட விவாதிச்சிருக்காங்க. இன்னும் சில பேர் சனிக்கிழமை வரட்டும் நான் அவரிடமே பேசிக்கறேன் அப்படின்னு சொல்லியிருக்காங்க. நமக்கும் பேச வேண்டியது இருக்கு.. ராத்திரி பேசுவோம்” என்கிறார் கமல்.
கடந்த வாரம் முழுக்க பிக்பாஸ் போட்டியாளர்களிடையே அழுகையும், சண்டையுமாக சென்றது. சுருதி தாமரைச் செல்வியின் காயினை எடுத்ததிலிருந்து ஆரம்பித்தது எல்லாமும். சண்டையில் பாவனியும் போய் மாட்டிக் கொண்டார். இசை வாணியின் லீடர்ஷிப்புக்கு சில எதிர்ப்புக் குரல்களும் ஆங்காங்கே இருந்தன. கேட்கலன்னா, நான் கமல் சார்ட்டயே பேசிக்கிறேன் என சொன்னார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் இதுகுறித்தெல்லாம் கமல் விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

View this post on Instagram
 
A post shared by Vijay Television (@vijaytelevision)

29-ஆம் தேதி எபிசோடில், கிராமத்தாரா நகரத்தாரா பட்டிமன்றம் நடந்தது. அதில் ஆளாளுக்கு பல விஷயங்களைப் பேசியது செம்ம எண்ட்டர்டெய்ன்மெண்ட். அதில் உணவு விஷயத்தில் கிராமத்தாரும், பிக்பாஸ் ஆட்டம் புரிந்து விளையாடுவதில் நகரத்தாரும் இசையால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கிராமத்தாரா, நகரத்தாரா பட்டிமன்றம் போய்க்கொண்டிருக்கும்போது நாணயங்களைப் பற்றிய பேச்சை ஆரம்பித்தார் சுருதி. தாமரை பொங்கியெழுந்து மீண்டும் சாமியாடத் தொடங்கிய பின்புதான் அனைவரும் அமைதியானார்கள். தாமரையை அடக்கி வாசிக்கச் சொல்லி ராஜு கொடுத்த அட்வைஸ் ஸ்வீட்டான விஷயம். 
ஆனால் வீக்கெண்ட்டின் குறும்பட ஷோவுக்காக எல்லாரும் காத்திருக்கிறார்கள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது

தவிர சுருதி அணியும் உடை பற்றி தாமரைச் செல்வி பேசியதும் ஆடியன்ஸ்களுக்கு கொஞ்சம் எதிர் ரியாக்‌ஷன்களைக் கொடுத்தது. உடை அவரவர் விருப்பம் சிலர் கமெண்ட் செய்தனர். சிபி, தாமரைச் செல்வியைக் கண்டித்த விதம் ஆடியன்ஸ்களிடமிருந்து ஹார்ட்க்களை அள்ளிக் கொடுத்தது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget