Bigg Boss 6 Tamil : 'செருப்பால அடிப்பேன்’... தனலட்சுமியோடு யுத்தத்தை தொடங்கிய ராபர்ட் மாஸ்டர்
Bigg Boss 6 Tamil : தனலட்சுமி மற்றும் ராபர்ட் மாஸ்டர் ஆகிய இருவருக்கும், அம்மி கல்லில் மாவு அறைக்கும் போது ஆரம்பித்த சண்டை இன்றும் முடியாமல் நீண்டு கொண்டு இருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே, சண்டை போட்டுக்கொண்டும் முகத்தை சுழித்து கொண்டு இருப்பவர் தனலட்சுமி. இப்போது இவருக்கும் ராபர்ட் மாஸ்டருக்கும் சண்டை ஆரம்பித்து, சூடு பிடித்து வருகிறது. ஒன்றும் இல்லாத சின்ன விஷயத்திற்கு சண்டை எழும்பினாலும், அது இப்போது பெரிய சிக்கலாக அவதாரம் எடுத்துள்ளது. சமையல் செய்யும் இடத்தில், அம்மியில் மாவு அறைத்து கொண்டு, இது சரியில்லை அது சரியில்லை என குறை சொல்ல ஆரம்பித்தார் தனலட்சுமி. அதற்கு ராபர்ட் மாஸ்டர், சமாதானம் படுத்தும் வகையில் பேசினார்.
சண்டையின் தொடக்கப் புள்ளி #Robert #Dhanalakshmi #BiggBossTamil #BiggBossTamil6 #Varisu #Thunivu pic.twitter.com/KiabMUnJ6b
— BIGGBOSS VIDEOS (@BIGGBOSS_VIDEOS) November 1, 2022
பின்னர், பகல் நேரத்தில் உறங்கி கொண்டு இருந்த தனலட்சுமியை பார்த்து, “எழுந்துவிடு, பகலில் தூங்காதே. நாய் குரைக்கும்.” என்று சொன்னார். அதை கேட்டும் காதில் வாங்கிகொள்ளாத தனலட்சுமி, “வேற வேலையே இல்ல இவர்களுக்கு” என்று சொல்லி அவரின் உறக்கத்தை தொடர்ந்தார். அதற்கு ராபர்ட் மாஸ்டர் “ யாரை நீ சொல்கிறாய். செருப்பால அடிப்பேன்.” என சொன்னார்.
#Dhanalakshmi vs #Robert Part 1#BiggBoss #BiggBossTamil #BiggBossTamil6 #Varisu #Thunivu pic.twitter.com/jPrBhnq1w2
— BIGGBOSS VIDEOS (@BIGGBOSS_VIDEOS) November 1, 2022
#Dhanalakshmi vs #Robert part 6#BiggBoss #BiggBossTamil #BiggBossTamil6 #Varisu #Thunivu pic.twitter.com/o1JzlCiYwS
— BIGGBOSS VIDEOS (@BIGGBOSS_VIDEOS) November 1, 2022
அவ்வளவுதான் அங்கு துவங்கியது பஞ்சாயத்து, “நாயை பார்த்து நாய் குரைக்க போகிறது. ” என்று ராபர்ட் சொல்ல, “ரொம்ப பேசுறீங்க மாஸ்டர். நான் நாயகவே இருந்துட்டு போறேன்.” என தனலட்சுமி கூறினார். இதனையடுத்து அந்த அறையை விட்டு விலகினார் ராபர்ட் மாஸ்டர். இவர்களுக்கான சண்டை இத்துடன் முடியாமல் பல எபிசோடுகளுக்கு நீண்டு கொண்டு போகும் என்பது நன்றாக தெரிகிறது.
இந்நிகழ்ச்சியின் முதல் வாரத்தில், ஜிபி முத்து அவராகவே வெளியேறினார். பின் அதே வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்ட சாந்தியை அடுத்து, இரண்டாம் வாரத்தில் அசல் கோலார் எலிமினேட் செய்யப்பட்டார். இவர்கள் சென்ற பின், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன்,அரவிந்த், சீரியல் நடிகர் முகம்மது அசீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் மற்றும் மைனா நந்தினி என மொத்தம் 18 போட்டியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.