Bigg Boss 5Tamil: ‛எள்ளு வய பூக்கலையே... பிறந்த நாளுன்னு பாக்கலையே...’ சுருதி இறுதியாய் விடைபெற்றார்!
பெரும்பாலானோர் சுருதி பாதுகாக்கப்பட வேண்டும் என விரும்பினர். ஆனால் வழக்கமான பீடிகைக்குப்பின் சுருதி வெளியேற்றப்பட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் எலிமினேட் நாளான இன்று வழக்கத்திற்கு மாறாக சோகத்திற்கு பதில் கொண்டாட்டமாக துவங்கியது. அதற்கு காரணம் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாள் இன்று. நிகழ்ச்சிக்கு அவர் உள்ளே நுழைந்ததில் இருந்து கிட்டத்தட்ட நிகழ்ச்சியின் பெரும்பாலான நேரத்தை கமலுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதில் செலவிடப்பட்டது.
பிக்பாஸ் போட்டியாளர்கள் இணைந்து இளமை இதோ இதோ பாடலை ஹாப்பி பர்த்டே கமல் சார் என வரிகளை மாற்றி அதே ராகத்தில் பாடி வாழ்த்தினர். அதன்பின் பிக்பாஸ் குழு சார்பில் மேடையில் கமலுக்கு மெகா கேக் தரப்பட்டது. அதை போட்டியாளர்கள் உட்பட பார்வையாளர்கள் அனைவருக்கும் பகிர்ந்து தர முடிவு செய்யப்பட்டது. அதன்பின் பிக்பாஸ் போட்டியாளர்கள் தங்களின் தனித்திறமையை வாயிலாக கமலுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
குறிப்பாக இமான் அண்ணாச்சி மட்டும் தாமரைச் செல்வி ஆகியோர் இணைந்து ஒரு குறு நாடகம் போட்டனர். டயலாக் ஒன்றில், என்னிடம் கமல் சார் நம்பர் உள்ளது என்று இமான் அண்ணாச்சி சொன்னார். அதற்கு நான் கேட்டாலும் அவர் தருவார் என்று தாமரைச்செல்வி சொல்ல, உன் பேரு என்ன என அண்ணாச்சி கேட்டார். தாமரை என தாமரைச்செல்வி பதில் கூற, தாமரைக்கெல்லாம் அவர் நம்பர் தர மாட்டார் என பாஜகவை மறைமுகமாக இந்த நடிக்க கமல் உள்ளிட்ட அனைவரும் கைதட்டி ரசித்தனர்.
கடைசியில் பேசிய ப்ரியங்கா, உங்கள் பிறந்த நாளை முன்னிட்டு எலிமினேஷன் இருக்காது என்பது போன்ற ஒரு பீடிகை போட்டார்.
எந்த விழாவாக இருந்தாலும் அதில் சலுகைகள் இருக்கக் கூடாது. மக்கள் அளித்த வாக்குற்கு மதிப்பளிக்க வேண்டும். அதனால் எழிமினேஷன் இருக்கும் என்றார். வெச்ச ஐஸ் எல்லாம் வீணா போச்சு என்பது போல் பிரியங்கா அமர்ந்தார்.
அதன்பின் பிக் பாஸ் பேசத் துவங்கினார். கமல் அனுமதியோடு போட்டியாளர்களுக்கு பிறந்தநாள் பரிசு அளிக்கப் போவதாக தெரிவித்தார். என்ன பரிசு தரப் போகிறார் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தின் Glimpse அவர்களுக்கு காண்பிக்கப்பட்டது.
அதன்பின் ஒவ்வொருவராக காப்பாற்றப்படும் அவர்கள் அறிவிக்கப்பட்டனர்.
சிபி அதன்பின் அப்சரா அதன்பின் பாவணி, மதுமிதா, ஐக்கி பெர்ரி என ஐந்து பேர் காப்பாற்றப்பட்டனர்.
இறுதியாக அபினய் மற்றும் சுருதி நிலுவையில் இருந்தன. இது யார் வெளியேற்றப்படுவார் என்று போட்டியாளர்களிடம் கமல் கேட்டார். பெரும்பாலானோர் சுருதி பாதுகாக்கப்பட வேண்டும் என விரும்பினர்.
வழக்கமான பீடிகைக்குப்பின் சுருதி வெளியேற்றப்பட்டார்.
இதைத் தொடர்ந்து தான் கைப்பற்றிய நாணயம் ஒன்றை மதுமிதாவுக்கு வழங்கிய பின் அங்கிருந்து விடை பெற தயாரானார். அப்போது பேசிய பிக் பாஸ், நாணயத்துடன் மெயின் டோர் வழியாக வெளியே வரவும் என அறிவித்தார். கமல் கொடுத்து அனுப்பிய கேக் மூலம் ஸ்ருதிக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் கேக் வெட்டி போட்டியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அதன்பின் நாணயத்தோடு சுருதி வெளியேறி கமல் முன் மேடையில் தோன்றினார். அவர் நாணயத்தை பயன்படுத்தி மீண்டும் வருவார் என்று போட்டியாளர்கள் நினைத்துக் கொண்டிருக்க, ‛இது உங்க நாணயம்... இதை யாருக்கும் தர முடியாது.. எங்க நியாபகமா நீங்களே வெச்சுக்கோங்க...’ என அவருக்கு கொடுத்து, போட்டியிலிருந்து மொத்தமாக அனுப்பி வைத்தார் கமல். நாளை சுருதியின் பிறந்தநாளாம்.... நல்ல பரிசு தான்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்