‛வலி என்றால்.. காதலின் வலி தான்... வலிகளில் பெரிது...’ மீண்டு வந்த யாஷிகாவை தேடி வந்த நிரூப்!
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் நிரூப்பிற்கு விபத்திலிருந்து யாஷிகா மீண்டு வந்த விபரம் தெரியாது. அவர் சிகிச்சையிலிருந்து மறுபிறவி எடுத்ததும் தெரியாது.
பிக்பாஸ் வீட்டில் காதல் புதிதல்ல. ஆனால், அது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்குள் நடந்து பார்த்திருப்போம். ஆனால், வேறு ஒரு சீசனில் பங்கேற்ற போட்டியாளரும், மற்றொரு சீசனில் பங்கேற்ற போட்டியாளரும் காதலித்து பார்த்ததுண்டா? ஆம்.. அதுவும் நம்ம பிக்பாஸ் தமிழில் தான் நடக்கிறது.
கடந்த சீசனில் பங்கேற்ற யாஷிகாவும்- தற்போதைய சீசன் 5 போட்டியாளர் நிரூப்பும் காதலர்கள். போட்டிக்குள் நுழைந்த போதே, தன்னுடைய காதலி யாஷிகா என்பதை கூறி, தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள விருப்பம்இல்லையென்றும், தனக்கென தனி அடையாளம் வேண்டும் என்றும் நிரூப் கூறியதை இந்த இடத்தில் நினைவுபடுத்த வேண்டியுள்ளது.
7 அடி உயரம், ஆஜானுபாகு என இந்த சீசனில் தனித்து தெரிகிறார் நிரூப். அவர் போட்டியில் பங்கேற்ற இந்த காலகட்டத்தில் தான், புதுச்சேரிக்கு தன் நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்ற யாஷிகாவின் கார் விபத்திற்கு உள்ளானது. அதில் யாஷிகாவின் நெருங்கிய தோழி பலியானார். யாஷிகா படுகாயம் அடைந்து, நீண்ட சிகிச்சைக்குப் பின் தற்போது தான் அதிலிருந்து மீண்டு, நடக்கத் தொடங்கியுள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் நிரூப்பிற்கு யாஷிகா விபத்தில் சிக்கி சிகிச்சையில் இருந்த நிலையில் அவர் நிலைமை என்ன என்கிற விபரம் தெரியாது. அவர் சிகிச்சையிலிருந்து மறுபிறவி எடுத்ததும் தெரியாது. இந்நிலையில் தான், பிக்பாஸ் போட்டியின் முக்கிய நிகழ்வான உறவினர்கள், வீட்டுக்குள் வரும் டாஸ்க் நடந்து கொண்டிருக்கிறது. நிரூப் சார்பில் அவரது தந்தை வந்தார். அவர் கலகலப்பாக பல உரையாடலை நிகழ்த்தி சென்றார். அவருடன் தனியாக பேசும் போது, நிரூப் கேட்ட ஒரே வார்த்தை, ‛யாஷிகா எப்படி இருக்கா...’ என்பது தான். அதற்கு அவரது தந்தை மழுப்பலான பதிலை மட்டுமே அவருக்கு தந்தார்.
இந்நிலையில் தான், யாஷிகா பிக்பாஸ் வீட்டிற்கு வரும் ப்ரொமோ வெளியாகியுள்ளது. ஆனால், அவர் அடைக்கப்பட்ட கண்ணாடி பெட்டிக்குள் இருக்கிறார். அவர் சிகிச்சையில் இருந்தது தெரியாமல் இருக்க அந்த ஏற்பாட்டை செய்திருக்கலாம். கண்ணாடி பெட்டிக்குள் இருக்கும் தன் காதலியை காண, ஆவலாய் ஓடி வரும் நிரூப், கண்ணாடியில் அவர் கைகளை கோர்க்கும் நிகழ்வு, காதலின் உச்சமாக தெரிகிறது. இருவரும் கண்ணாலும், கையாலும் பேசிக்கொள்கிறார்கள். காதலியை கட்டி அணைக்க முடியாமல் நிரூப் தவிக்கிறார். அதன் பின் சக போட்டியாளர்கள் வந்து சேர, அவர்களுடன் பேசுகிறார் யாஷிகா. ‛வலி என்றால் காதலின் வலி தான், வலிகளில் கொடிது...’ என்ற வரிகளை நிரூப்பின் ஏக்கத்தில் அறிய முடிகிறது.
இதோ அந்த ப்ரொமோ வீடியோ...
View this post on Instagram
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்