Bigg Boss Tamil 9 : அடக்கடவுளே! உடைந்து சிதறிய கத்தி... ரத்த காவு வாங்கிய பிக்பாஸ் வீடு...!
Bigg Boss Tamil 9 : கத்தியால் தேங்காயை உடைக்க முயன்றபோது கத்தி உடைந்து பிரவீன் காலில் பட்டு காயம் ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 இல் போட்டியாளர்கள் இடையே அடுத்தடுத்து வாக்குவாதம் ஏற்பட்டு போட்டி சூடு பிடித்து வருகிறது. இப்படியான நிலையில் கத்தியால் தேங்காயை உடைக்க முயன்றபோது கத்தி உடைந்து பிரவீன் காலில் பட்டு காயம் ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ரத்த காவு வாங்கிய பிக்பாஸ் வீடு
பிக்பாஸ் வீட்டில் முதல் வாரத்திற்கான சமையல் பொறுப்புகளை கனி திரு , கெமி , நந்தினி மற்றும் பிரவீன் ஆகியோர் எடுத்துள்ளார்கள். அப்போது பிரவீன் தேங்காய் உடைக்க கத்தியை பயன்படுத்தினார். அப்போது கத்தி உடைந்து நந்தினி மேல் பட்டது. பின் உடைந்த கத்தி பிரவீன் காலில் விழுந்து அவருக்கு காயம் ஏற்பட்டு பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
OMG#BiggBossTamil9 #BiggBossTamilpic.twitter.com/bGEr71vzR2
— BB Tamil Videos (@BB_Tamil_Videos) October 7, 2025
தண்ணிர் இல்லாத காட்டில் தவிக்கு போட்டியாளர்கள்
பிக்பாஸ் முதல் வார சேலஞ்சாக போட்டியாளர்களுக்கு வெறும் குடிப்பதற்கு மற்றும் கழிவறைக்கு பயன்படுத்த மட்டுமே தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. தண்ணீரின் அத்தியாவசியத்தை உணர்த்துவதற்காக இந்த சவால் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தாலும் துணிகளை துவைப்பது , குளிப்பது போன்ற மற்ற தேவைகளுக்காக தண்ணீர் இல்லாமல் போட்டியாளர்கள் தவித்து வருகிறார்கள். தண்ணீரை மையப்படுத்தி அவர்களிடையே வாக்குவாதங்கள் உருவாகின்றன.
சூப்பர் டீலக்ஸ் சலுகைகள்
அதே போல் சூப்பர் டீலக்ஸ் அறையில் இருக்கும் போட்டியாளர்களுக்கு மட்டும் சிறப்பு சலுகைகள் மற்றும் பிற போட்டியாளர்களை வேலை சொல்லும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் சூப்பர் டீலக்ஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் மற்ற போட்டியாளர்களை நடத்தும் விதமும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
தொடர் சர்ச்சையில் வாட்டர்மெலன் ஸ்டார்
இந்த ஆண்டு பிக்பாஸில் ஆரம்பம் முதல் பல்வேறு சர்ச்சைகளில் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் சிக்கி வருகிறார். முதலில் குறட்டை விட்டதற்காக பிரவீன் ராஜ்தேவுடன் அவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. பின் கெமியுடன் , மூன்றாவது நாளாக நந்தியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதிசயம் என்கிற எஃப் ஜே யுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது கை நீட்டி பேசினால் வெட்டிருவேன் என எஃப் ஜே திவாகரை மிரட்டியுள்ளது பேசுபொருளாகியுள்ளது. மேலும் சீரியல் நடிகர் கமருதீன் வாட்டர்மெலன் ஸ்டாரை அடிக்க கை ஓங்கியதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் வார நாமினேஷனில் பலரால் வாட்டர்மெலன் ஸ்டார் எலிமினேஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளார்.
யாருக்கு யாரோடு பிரச்சனை
கமருதின் கெமி இடையிலும் , விஜே பாரு மற்றும் சுபிக்ஷா இடையிலும் , சின்ன சின்ன பிரச்சனைகளுக்காக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.





















