Bigg Boss 7 Tamil: பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் எலிமினேசன் இவரா?
Bigg Boss 7 Tamil: கன்சக்ஷன் ரூமுக்குள் சென்ற வினுஷா தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற விரும்புவதாக கூறியுள்ளார்.
Bigg Boss 7 Tamil: இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வினுஷா வெளியேற்றப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 7:
விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளன. கடந்த 2017ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய நிலையில் தற்போது ஏழாவது சீசன் நடைபெற்று வருகிறது. கடந்த 1ம் தேதி பிரமாண்டமாக பிக்பாஸ் சீசன் 7 தொடங்கியது. இதில் நடிகர் நடிகைகள், பாடகர், யூடியூப் பிரபலம் என 18பேர் போட்டியாளர்களாக பங்கேற்றனர்.
இந்த சீசனில் வழக்கத்திற்கு மாறாக இரண்டு பிக்பாஸ் வீடுகள் என பிரிக்கப்பட்டு போட்டியாளர்களும் இரு குழுவாக பிரிக்கப்பட்டு ஒரு சிலர் ஸ்மால் பாக்ஸ் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். பிக்பாஸ் தொடங்கிய முதல் வாரத்திலேயே போட்டியாளர்களுக்கு இடையே சர்ச்சை ஏற்பட்டது. முதல் வாரத்தில் அனன்யா வெளியேற்றப்பட்ட நிலையில் 2வது வாரத்தில் உடல்நிலை சரியில்லை என கூறி பவா செல்லதுரை வெளியேறினார். அவரை போட்டியில் பங்கேற்குமாறு பிக்பாஸ் வலியுறுத்தியும் பவா செல்லதுரை வெளியேறினார்.
வெளியேற்றப்படுவாரா வினுஷா?
தற்போது 16 போட்டியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக அர்ச்சனா மற்றும் கானா பாலா நுழைவார்கள் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த வாரம் எலிமினேஷன் ஆகும் நபர் குறித்த தகவலும் வைரலாகி வருகிறது. இந்த வாரம் மாயா, நிக்சன், மணிசந்திரா, விசித்ரா, பிரதீப் ஆண்டனி, விஜய் வர்மா, வினுஷா, சரவண விக்ரம் ஆகியோர் நாமினேட் லிஸ்டில் இருந்தனர். இதில், பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த வினுஷா எலிமினேட் செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது. இந்த வாரத்துக்கான வாக்குகள் அடிப்படையில் வினுஷா கடைசி இடத்தில் இருப்பதால் அவர் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது.
அதேநேரம், கன்சக்ஷன் ரூமுக்குள் சென்ற வினுஷ தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற விரும்புவதாகவும், தனக்கு சைனஸ் பிரச்சனை இருப்பதால் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஏசி தனது அசௌகரியத்தை கொடுப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், தனது வீட்டை மிகவும் மிஸ் செய்வதால் தானே போட்டியில் இருந்து வெளியேறுவதாக பிக்பாஸிடம் வினுஷா கேட்டு கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், பிக்பாஸ் வினுஷாவை சமாதானப்படுத்த முயன்றதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, பிக்பாஸிடம் வினுஷா பேசியது குறித்து கருத்து கூறிய மாயா, இந்த வார எலிமினேஷன் வினுஷா இல்லை என்றும், விசித்ரா தான் வெளியேற்றப்படுவார் என்றார். இதனால் பிரதீப் ஆண்டனிக்கும், மாயாக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
O2 Task in Bigg Boss house.. 😱 | Bigg Boss Tamil Season 7 - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #KamalHaasan #Disneyplushotstartamil #RendulaOnnuPaakkalaam #BiggBossTamil #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV pic.twitter.com/7Vg8v39o17
— Vijay Television (@vijaytelevision) October 20, 2023