Bigg Boss 7 Tamil Contestants: பிக்பாஸ் வீட்டுக்கு வராமல் எஸ்கேப் ஆன அப்பாஸ், பப்ளு, சோனியா அகர்வால்!
பிக்பாஸ் சீசன் 7 அறிவிக்கப்பட்டதும், அப்பாஸ், ஷாம், சோனியா அகர்வால், ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா சங்கர், கௌசல்யா ஆகியோர் பிக்பாஸில் பங்கேற்பார்கள் எனக் கூறப்பட்டிருந்தது.
அப்பாஸ், சோனியா, பப்ளு உள்லிட்டோர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் எனக் கூறப்பட்ட நிலையில் இறுதிப்பட்டியலில் இவர்கள் பெயர் இடம்பெறாதது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 7 இன்று தொடங்குகியுள்ளது. இன்று மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கி தற்போது நடைபெற்று வரும் நிலையில், முதல் போட்டியாளராக நடிகர் கூல் சுரேஷ் நிகழ்ச்சியில் அறிமுகமாகியுள்ளார்.
ஏற்கெனவே 6 சீசன்கள் முடிந்த நிலையில் 7வது சீசனில் யாரெல்லாம் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு பெரிதும் இருந்தது. ஆனால், பிக்பாஸ் சீசன் 7 இன்று தொடங்குவதை ஒட்டி நேற்றே பிரம்மாண்ட படப்பிடிப்பு முடிந்து விட்டதாகக் கூறப்பட்டது. இதற்கு முன்னதாக பிக்பாஸ் சீசன் 7 குறித்த புரோமோ வீடியோவில் இந்த முறை இரு வீடுகள் இருப்பதாக கமல்ஹாசன் ஷாக் கொடுத்திருந்தார்.
இரு வீடுகள், 18 போட்டியாளர்கள் என்பதால் புது விதமான உணர்வை பிக்பாஸ் சீசன் 7 கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே, சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்கு முதல் போட்டியாளராக உள்ளே சென்று விட்டதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இவர்கள் தவிர அக்ஷயா உதயகுமார், மாயா கிருஷ்ணன், சவரண விக்ரம், விசித்ரா, பாவா செல்லதுரை, பாடகர் யுகேந்திரன், விணுஷா தேவி, பிரதீப் ஆண்டனி ஆகியோர் பிக்பாஸ் 7 சீசனில் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
Grand Opening..🔥😍 #GrandLaunch of Bigg Boss Tamil Season 7 - இன்று மாலை 6 மணிக்கு நம்ம விஜய் டிவில.. @ikamalhaasan @disneyplusHSTam #RendulaOnnuPaakkalaam #BiggBossTamil #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV pic.twitter.com/glACGyxoVa
— Vijay Television (@vijaytelevision) October 1, 2023
ஆனால் பிக்பாஸ் சீசன் 7 அறிவிக்கப்பட்டதும், அப்பாஸ், ஷாம், சோனியா அகர்வால், ஸ்ரீதேவி, ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா சங்கர் கௌசல்யா ஆகியோர் பிக்பாஸில் பங்கேற்பார்கள் என கூறப்பட்டிருந்தது. இவர்கள் மட்டும் இல்லாமல் இரண்டாம் திருமணம் செய்து சர்ச்சைக்குள் சிக்கிய நடிகர் பப்ளு, நடிகை தர்ஷா குப்தா ஆகியோர் பெயர்களில் பிக்பாஸில் அடிப்பட்டனர். ஆனால் கடைசி நேரத்தில் பப்ளு மற்றும் தர்ஷா குப்தா பிக்பாஸ் வீட்டுக்கு வராமல் தவிர்த்துவிட்டதாகக் கூறப்படுகிறது. எனினும், பிக்பாஸ் லிஸ்டில் உள்ள சில நடிகர், நடிகைகள் ஷாக் எண்ட்ரி கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி 24x7 நேரலையும் ஒளிபரப்பாக உள்ளது. நாளை (அக்டோபர் 2) இரவு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரையும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.30 மணி முதல் 11 மணி வரையும் ஒளிபரப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: Bigg Boss 7 Tamil LIVE: பிக் பாஸ் ரசிகர்களே தயாரா... இன்னும் சில மணி நேரங்களில் பிக் பாஸ் 7.. அப்டேட்ஸ் உடனுக்குடன்!