மேலும் அறிய
Advertisement
BiggBoss 7 Tamil: அர்ச்சனாவால் பற்றி எரியும் பிக்பாஸ் வீடு.. பிரதீப் வெளியிட்ட டிவிட்டர் பதிவு
ஒரு கட்டத்துக்கு மேல் பெண் போட்டியாளர்கள் எல்லாரும் அர்ச்சனாவை டார்கெட் செய்து பிரச்சனை செய்வதால் பிக்பாஸ் வீட்டில் கலவரம் ஏற்பட்டுள்ளது.
Big Boss 7 Tamil: பிக்பாஸ் வீட்டிற்குள் விசித்ரா மற்றும் அர்ச்சனா ஒரு கூட்டணியாகவும், மாயா, பூர்ணிமா, ஐஷூ மற்றும் ஜோவிகா ஒரு கூட்டணியாகவும் பிரிந்து சண்டையிட்டு பிக்பாஸ் வீட்டையே அலறவிடும் நிலையில் பிரதீப் ஆண்டனி கருத்து பதிவிட்டுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7ல் வைல்டு கார்டு என்ட்ரியாக 5 போட்டியாளர்கள் அனுப்பப்பட்டனர். தினேஷ், அர்ச்சனா உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றதில் இருந்து போட்டியாளர்களிடையே ஏராளமான குழப்பம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த வாரம் பிரதீப்பால் பெண் போட்டியாளர்களுக்கு பிரச்சனை ஏற்படுவதாக கூறி, அவர் வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில், அதை பிரதீப் வெளியேற்றப்பட்டது தொடர்பாக போட்டியாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
மாயா, பூர்ணிமா, ஜோவிகா, ஐஷூ உள்ளிட்டோர் கூட்டணி சேர்ந்து பிரதீப்பை வெளியேற்றியதாக விசித்ராவும், அர்ச்சனாவும் கேட்டனர். அதேநேரம், மாயாவின் கேப்டன்ஷிப் சரியில்லை என்றும், போட்டியாளர்களை அவர் கொடுமைப்படுத்துவதாகவும் கூறி அர்ச்சனா பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இதற்கிடையே, ஜோவிகா, மாயா, பூர்ணிமாவுக்கும், அர்ச்சனாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்துக்கு மேல் பெண் போட்டியாளர்கள் எல்லாரும் அர்ச்சனாவை டார்கெட் செய்து பிரச்சனை செய்வதால் பிக்பாஸ் வீட்டில் கலவரம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பிக்பாஸ் வீடு பற்றி எரிவதை பார்த்து சிரிப்பதாக கூறி பிரதீப் ஆண்டனி டிவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
My most favourite meme of all time 🎈
— Pradeep Antony (@TheDhaadiBoy) November 7, 2023
Good morning, and in case I don't see ya, good afternoon, good evening, and good night!
⭐#GamerLife #JustOneLastTime pic.twitter.com/vv0OsgpOhG
பிக்பாஸ் வீட்டில் பிரதீப் இருப்பதால் பெண் போட்டியாளர்கள் பாதுகாப்பாக உணரவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டது. அது குறித்து பிரதீப் விளக்கம் அளிக்க வருவதற்குள் போட்டியாளர்களிடம் ரெட் கார்டு பெறப்பட்டு பிரதீப்பை போட்டியில் இருந்து கமல்ஹாசன் வெளியேற்றினார். இதனால் சமூக வலைதளங்களில் கமல்ஹாசனுக்கு எதிராக சினிமா பிரபலங்கள் உட்பட பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர். பிரதீப்பை மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்ப வேண்டும் என்றும் சிலர் குரலெழுப்பி வருகின்றனர்.
இதற்கிடையே பிரதீப்பை வைத்து பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களுக்கு இடையே ஏற்படும் போட்டி பார்வையாளர்களை எரிச்சலடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: Jigarthanda Double X: ரஜினி - கமல் நடிப்பில் ‘ஜிகர்தண்டா 2’..கார்த்திக் சுப்பாராஜ் பகிர்ந்த சுவாரஸ்யம்!
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
கல்வி
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion