மேலும் அறிய

Jigarthanda Double X: ரஜினி - கமல் நடிப்பில் ‘ஜிகர்தண்டா 2’..கார்த்திக் சுப்பாராஜ் பகிர்ந்த சுவாரஸ்யம்!

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ரஜினி மற்றும் கமல்ஹாசனை நடிக்க வைக்க தான் ஆசைப்பட்டதாகக் கூறியுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ்!

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்

ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டவர்கள் நடித்து கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி இருக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். ஜிகர்தண்டா படத்தின் ட்ரெலர் சமிபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பரவலான வரவேற்பைப் பெற்றது. வரும் நவம்பர் 10 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது இப்படம். 

4 ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகளில்

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ திரைப்படம் 2019ஆம் ஆண்டு வெளியானது. இதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய ‘ஜகமே தந்திரம்’ மற்றும் ‘மஹான் உள்ளிட்ட இரண்டு படங்களும் ஓடிடியில் வெளியாகின. தற்போது 4 ஆண்டுகளுக்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜின் படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இது குறித்து அவர் பேசுகையில், “பேட்ட மாதிரியான மிகப்பெரிய ஒரு படத்திற்கு பிறகு நான்கு ஆண்டுகளுக்கு திரையரங்குகளில் படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்படும் என்பதை நான் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. என்னுடைய முதல் படமான பீட்சா படம் வெளியானபோது இருந்த பதற்றம் இந்தப் படத்தில் இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். 

ரஜினிகாந்த் தான் இன்ஸ்பிரேஷன்

தமிழ் சினிமாவின் முதல் கருப்பு  நிற கதாநாயகன் என்ற தீமை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் தான் பல இடங்களில் ரஜினிகாந்தின்  நடிப்பு வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தி இருப்பதாக கார்த்திக் சுப்பாராஜ் கூறியுள்ளார். “எனக்குத் தெரிந்து கிட்டதட்ட ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலேயே ரஜினிகாந்த் தான் முதல் கருப்பு நிற நடிகர் என்று நினைக்கிறேன். அதுவரை சினிமாவில் ஜூனியர் ஆர்டிஸ்ஸ் எல்லாம் கூட வெள்ளை நிறத்தில் தான் இருந்தார்கள்.

இந்தப் படத்தை 1970இல் நடக்கும் கதை என்று நான் முடிவு செய்துவிட்டேன். ஆனால் குறிப்பாக 1975இல் நடக்கும் கதையாக எடுத்ததற்கு முக்கியக் காரணம் ஒன்றும் இருக்கிறது. 1975இல் தான் ரஜினிகாந்த் அபூர்வ ராகங்கள் படத்தில் முதன்முறையாக அறிமுகமானார். ரஜினி இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன்பு தமிழ் கலாச்சாரத்தில் கருப்பு நிற ஹீரோ பற்றி எந்த மாதிரியான புரிதல் இருந்தது என்பதை மையப்படுத்தி இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன்” என்று கார்த்திக் சுப்பாராஜ் கூறினார்.

ரஜினி கமல் நடித்தால் எப்படி இருக்கும்

தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கார்த்திக் சுப்பாராஜ் ஒரு போஸ்டரை பகிர்ந்து பதிவிட்டுள்ளார். இந்தப் படத்தை எடுக்கும் ஒவ்வொரு தருணத்திலும் தன்னுடைய உதவி இயக்குநர்களிடம் தான் ஒரு விஷயத்திற்காக அடிக்கடி ஆதங்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.

மேலும், ஒருவேளை தான்1970களில் பிறந்திருந்தார் என்றால் நிச்சயமாக ஜிகர்தண்டா 2 படத்தை ரஜினி மற்றும் கமலை அதில் நடிக்க வைத்திருப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். இதனை சீரியஸாக எடுத்துக் கொண்ட அவரது துணை இயக்குநர் ஒருவேளை இந்தப் படத்தில் அவர்கள் இருவரும் நடித்தால் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து ஒரு போஸ்டரை உருவாக்கியுள்ளார். இந்தப் போஸ்டர் ரசிகர்களுக்கும் கார்த்திக் சுப்பாராஜ் போன்ற அதே மனநிலையைதான் தருகின்றன.

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget