Bhavna Balakrishnan | இனிமே விஜய் டி.வி.யில ஆங்கரா வரமாட்டேன்...! என்ன ஆச்சு பாவ்னா பாலகிருஷ்ணனுக்கு?
பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளர் பாவனா இனிமேல் விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றமாட்டேன் என்று கூறியிருப்பது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
![Bhavna Balakrishnan | இனிமே விஜய் டி.வி.யில ஆங்கரா வரமாட்டேன்...! என்ன ஆச்சு பாவ்னா பாலகிருஷ்ணனுக்கு? Bhavna Balakrishnan Vijay Tv anchor Tiff with Vijay Organisation why Bhavna Balakrishnan | இனிமே விஜய் டி.வி.யில ஆங்கரா வரமாட்டேன்...! என்ன ஆச்சு பாவ்னா பாலகிருஷ்ணனுக்கு?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/02/f95043d16c1116befe4fd5966284a923_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டில் வெள்ளித்திரை நடிகர், நடிகைகளுக்கு எந்தளவிற்கு வரவேற்பு உள்ளதோ, அதே அளவிற்கு சின்னத்திரை நடிகர்களுக்கும் அதே அளவிற்கு வரவேற்பு உள்ளது. அந்த வகையில், விஜய் டி.வி.யில் மிகவும் பிரபலமான தொகுப்பாளர்களில் ஒருவராக வலம் வந்தவர் பாவனா.
ராஜ் தொலைக்காட்சியில் தனது நிகழ்ச்சித் தொகுப்பாளர் பணியைத் தொடங்கிய இவர், விஜய் டி.வி.யில் இணைந்த பிறகு மிகவும் பிரபலம் அடைந்தார். சமீபகாலமாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக வலம் வருகிறார். ஐ.பி.எல்., உலககோப்பை டி20, சமீபத்திய நியூசிலாந்துக்கு எதிரான தொடர், இவை மட்டுமின்றி ப்ரோ லீக் கால்பந்து, கபடி, வாலிபால் உள்ளிட்ட ஆட்டங்களையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
மிகவும் பரப்பான சூழலிலும் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தனது ரசிகர்களுடன் உரையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் அவரது ரசிகர் ஒருவர் “மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் எப்போது உங்களை காணலாம்?” என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த பாவனா, இனிமேல் விஜய் தொலைக்காட்சியில் வர வாய்ப்பில்லை என்று கூறினார். மேலும், கலர்ஸ் தொலைக்காட்சியில் புதியதாக ஒளிபரப்பாக உள்ள “டான்ஸ் வி டான்ஸ் 2” தொலைக்காட்சியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் தெரிவித்தார்.
பாவனா கலர்ஸ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக வலம் வர உள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், விஜய் தொலைக்காட்சியில் இனிமேல் பணியாற்ற வாய்ப்பில்லை என்று கூறியிருப்பது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் அவரது சின்னத்திரை தொகுப்பாளர் வாழ்க்கையில் மிகுந்த உயர்வை அளித்தது விஜய் தொலைக்காட்சியில் அவர் பணியாற்றிய சூப்பர் சிங்கர் ஜூனியர், ஏர்டெல் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் ஆகும். நடிகர் சிவகார்த்திகேயன் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றிய காலத்தில் அவருடன் இணைந்து பல நிகழ்ச்சிகளை விஜய்தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கியுள்ளார். வி.ஜே. பாவனாவின் இந்த பதிலால் அவருக்கும், விஜய் தொலைக்காட்சிக்கும் என்ன பிரச்சினை? என்று சமூக வலைதளங்களில் விவாதம் ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க..
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)