Bharathi Kannamma : மனைவியை சந்தேகப்படக்கூடாதா? திருந்துங்கடா டீ வாங்கித்தரேன் மொமெண்ட்.. வைரலாகும் இந்த வார ப்ரோமோ!
8 ஆண்டுகளாக கணவனைப் பிரிந்து வாழும் கண்ணம்மா, எப்போது குடும்பத்தினருடன் சேர போர்கிறார் என விறுவிறுப்புடன் கதைக்களம் நகர்ந்துவருகிறது.
ஊருக்கு உபதேசம் சொல்லும் பாரதி எப்ப நீங்க திருந்தப்போறீங்க என தெறிக்கும் கமெண்ட்களுடன் இணையத்தில் வைரலாகிவருகிறது பாரதி கண்ணம்மா சீரியல் ப்ரோமோ..
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா. மனைவியை சந்தேகப்படும் கணவராக டாக்டர் பாரதி. நான் என்ன தவறு செய்தேன் என்ற கேள்விகளுடன் தனியாக வாழ்க்கை நடத்திவரும் கண்ணம்மா. இவர்களின் சந்தேகம் மற்றும் பாசப்போராட்டத்தை மையமாக வைத்து அமைக்கபட்ட கதைக்களம்தான் பாரதி கண்ணம்மா..
8ஆண்டுகளாக கணவனைப் பிரிந்து வாழும் கண்ணம்மா, எப்போது குடும்பத்தினருடன் சேர போர்கிறார் என விறுவிறுப்புடன் கதைக்களம் நகர்ந்துவருகிறது. ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தால் போதும், பாரதியின் சந்தேகம் தீர்ந்துவிடும். ஆனால் இத நான் எப்படி செய்து சீக்கிரம் சீரியல்ல முடிப்பேன் என்ற முனைப்போடு சுற்றித்திரிகிறார் இச்சீரியலின் இயக்குநர்.
இதனைப்பார்த்த ரசிகர்கள் பொறுமையை இழந்து எப்பதான் என்ட் கார்டு போட போடுறீங்க என்று கேட்ட நிலையில்தான் கடந்த சில மாதங்களாக சீரியல் விறுவிறுப்பாக நகர்ந்துவருகிறது. ஒரு புறம் வெண்பாவுக்கு ஒரு பக்கம் அவங்க அம்மா தொல்லை கொடுக்க மறுபுறம் பாரதி கண்ணம்மாவுக்கு தொல்லைக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.
இதனிடையே பாரதியின் குடும்ப நண்பர் ஒருவர் திறந்துள்ள மருத்துவமனையில் பாரதி சீப் டாக்டராக இருக்கும் நிலையில், அதே மருத்துவமனையில் அட்மின் ஹெட்டாக கண்ணம்மா வேலை செய்கிறார். தற்போது இருவரும் ஒரு இடத்தில் எலியும் பூணையுமாக சண்டை போட்டு வருவது ரசிகர்களின் பொறுமையை மிகவும் சோதித்து வருவது போல் உள்ளது.
இந்நிலையில் தான் மருத்துவமனைக்கு எமர்ஜென்சியாக தலையில் அடிபட்டு வரும் பெண்ணை டாக்டர் பாரதி காப்பாற்றும் நிலையில்தான், இதற்குக் காரணம் குடிக்கார கணவர்தான் என்று தெரியவருகிறது. இதனையறிந்த பாரதி, எப்படி மனைவியை சந்தேகப்பட்டு அடிக்கிறாய் என்று கேள்விகேட்கிறார். ஆனால் மனைவிக்கு சப்போர்ட்டாக பேசும் குடிக்காரக் கணவர், அவனது மனைவியையும், பாரதியையும் இணைத்து பேசுகிறான். இதனால் கோபமடையும் பாரதி, அடிக்க முன்வரும்போது போக செக்கியூரிட்டி எல்லாம் வந்து தடுத்து விடுகின்றனர்.
பின்னர் எப்படி நீ மனைவியை சந்தேகப்படுகிறாய்? பொண்டாட்டிய சந்தேகப்படுகிறவன் எல்லாம் ஆம்பளயா? உன்னையெல்லாம் சும்மா விடக்கூடாது என்று சொல்ல, மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும், கண்ணம்மா பாரதியைப் பார்த்து கடுப்பாக பார்க்கிறாள். இதனையடுத்து போலீஸ் வந்து குடிக்காரக் கணவரை பிடித்து சென்றுவிடுகிறார்கள். இந்த ப்ரோமா தான் தற்போது வைரலாகிவருகிறது. இதனைப்பார்த்த நெட்டின்கள் மற்றும் ரசிகர்கள், பாரதி மீண்டும் ஒரு முறை சொல்லுங்களேன்… நீங்களா சொல்றது முதல்ல நீங்கள் திருந்துங்க பாஸ்.. அப்புறம் நாட்ட திருத்தலாம்.என்று பதிவுகளை இணையத்தில் தெறிக்கவிடுகின்றனர்.