மேலும் அறிய

Actress Sonam Khan: இளம் வயதில் திருமணம்... திசை மாறி போன சினிமா பயணம்! - மீண்டும் கம்பேக் கொடுக்கிறாரா சோனம் கான்?

90களில் பாலிவுட்டின் மிக முக்கியமான நடிகையான வலம் வந்த சோனம் கான் வாழ்க்கை திருமணத்தால் திசை மாறியது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? 

90களில் பாலிவுட்டின் மிக முக்கியமான நடிகையான வலம் வந்த சோனம் கான் வாழ்க்கை திருமணத்தால் திசை மாறியது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? 

சினிமா வாழ்க்கை

சோனம் கான் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவருக்கு பெற்றோர் வைத்த பெயர் “பக்தவர் கான்” ஆகும். 1988 ஆம் ஆண்டு யாஷ் சோப்ரா இயக்கிய “விஜய்” படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். 1989 ஆம் ஆண்டு வெளியான திரிதேவ் படம் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. இதில் விஜய் படத்தின் முத்தக்காட்சிகளில் சோனம் கான் நடித்திருந்தார். சொல்லப்போனால் அன்றைய காலக்கட்டத்தில் முதல் காட்சியிலேயே முத்தக்காட்சியில் நடித்த ஒரே நடிகை இவர் தான் என சொல்லப்பட்டது. அப்போது சோனம் கானுக்கு வயது 16 தான். 

விஜய் படத்தில் ரிஷி கபூர் ஜோடியாக சோனம் நடித்திருந்தார். வயதில் இவரை விட ரிஷி 2 மடங்கு பெரியவர் என்பதால் முத்தக்காட்சியில் நடிக்க சங்கடப்பட்டதாக ஒரு நேர்காணலில் சோனம் தெரிவித்துள்ளார். ஷூட்டிங்கில் இருந்த அத்தனைபேர் முன்னிலையிலையும் அப்படி ஒரு காட்சியில் நான் நடிக்க விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து மிட்டி அவுர் சோனா என்னும் படத்தில் சோனமுக்கு நிர்வாண காட்சிகள் இருந்துள்ளது. இதனைக் கேள்விப்பட்டதும் அவர் கதறி அழுதுள்ளார். ஆனால் ஷூட்டிங்கில் அவர் அத்தை வந்து சாக்லேட் ஒன்றை கொடுத்து நிர்வாண காட்சியின் முக்கியத்துவத்தை விளக்க, சாக்லேட் கிடைத்த ஆசையில் அந்த காட்சியில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். 

திருமண வாழ்க்கை 

1991 ஆம் ஆண்டில் சோனம், தான் நடித்த த்ரிதேவ் படத்தை இயக்கிய ராஜீவ் ராயை காதல் திருமணம் செய்துக் கொண்டார். ஒரு நேர்காணலில் 'திரிதேவ்' படப்பிடிப்பின் போது தான் ஒருவருடன் டேட்டிங்கில் இருந்ததாக சோனம் ஒரு பேட்டியில் கூறியிருந்தார் . அதே நேரத்தில், ராஜீவும் ஒரு பெண்ணுடன் டேட்டிங் செய்து வந்துள்ளார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல இவர்கள் நட்பு காதலாக மாறி இருவரும் திருமண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்தனர். அப்போது சோனத்திற்கு வயது 19 தான். அதேசமயம் யாஷ் சோப்ரா சோனுவிடம் திருமணம் செய்துக் கொள்ள வேண்டாம் என எவ்வளவோ சொல்லியும், அவர் கேட்கவேயில்லை. 

1993 ஆம் ஆண்டு வரை தான் ஒப்பந்தமான படங்களில் நடித்து முடித்த சோனம், அதன்பின் முதலில் அமெரிக்காவிலும், பின் ஐரோப்பாவிலும் குடியேறினார். இந்த சமயத்தில் தம்பதியினர் இடையே இடைவெளி அதிகரித்தது. இதனால் இந்தியாவுக்கு திரும்பலாம் என சோனம் சொல்ல, ராஜீவ் அதனை மறுத்தார். அவரை திருமணம் செய்தது தவறு என சோனம் ஒரு கட்டத்தில் உணர்ந்தார்.  ஆனால் மகன் இருந்ததால் அவன் பெரியவனாகும் வரை பிரிய வேண்டாம் என முடிவு செய்தனர். தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு சோனம் ராஜீவ்வை விவாகரத்து செய்தார். பின்னர் முரளி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார். 

6 வருடம் மட்டுமே சினிமாவில் நடித்தாலும் சோனம் திரையில் செய்த மேஜிக் அவரை ரசிகர்களால் மறக்க முடியாதபடி வைத்திருந்தது. தற்போது 50 வயதாகும் சோனம் மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா?: வானிலை மையம் சொல்வது என்ன?
சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா?: வானிலை மையம் சொல்வது என்ன?
School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?
School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?
"கலங்கரை விளக்கம்.. அரிதிலும் அரிதான தலைவர்" மன்மோகன் சிங்குக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு
Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா?: வானிலை மையம் சொல்வது என்ன?
சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா?: வானிலை மையம் சொல்வது என்ன?
School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?
School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?
"கலங்கரை விளக்கம்.. அரிதிலும் அரிதான தலைவர்" மன்மோகன் சிங்குக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு
Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு
தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில்  14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..
தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில் 14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
ICAI CA Toppers: என்னது; 15% கூட தேர்ச்சி இல்லையா? ஆனாலும் திருப்பதிதான் முதலில்- சிஏ தேர்வு முடிவுகள் இதோ!
ICAI CA Toppers: என்னது; 15% கூட தேர்ச்சி இல்லையா? ஆனாலும் திருப்பதிதான் முதலில்- சிஏ தேர்வு முடிவுகள் இதோ!
ஆட்சியே மாறியிருக்குமே! இத்தன லட்சம் வாக்குகள் எண்ணலயா? என்னய்ய சொல்றீங்க!
ஆட்சியே மாறியிருக்குமே! இத்தன லட்சம் வாக்குகள் எண்ணலயா? என்னய்ய சொல்றீங்க!
Embed widget