Beast Part 2: என்னது பீஸ்ட் பார்ட் 2- வருதா? - இயக்குநர் நெல்சன் தந்த சர்ப்ரைஸ்..
ஒரு தரப்பு ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தாலும், கலவையான விமர்சனம் வெளியாகி இருப்பதால் பீஸ்ட் பார்ட் 2 வேண்டாம் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் பீஸ்ட் ஃபீவர் தொற்றிக்கொண்டுள்ளது. நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13-ம் தேதி வெளியானது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். படத்துக்கான முன்பதிவு தீவிரமாக இருந்தது. பல்வேறு திரையரங்குகளில் முன்பதிவு ஆரம்பித்த உடனேயே முடிந்துவிட்டது. மிகவும் எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே வெளியான பீஸ்ட் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், பீஸ்ட் பார்ட் - 2 வெளியாவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இயக்குனர் நெல்சர் ஒரு நேர்காணலில் தெரிவித்திருக்கிறார். தனியார் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில், வாய்ப்பு இருந்தால், பீஸ்ட் பார்ட் 2 வெளியாகும் எனவும், அதற்கான அனைத்து அம்சங்களையும் அந்த கதைக்களம் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இதனால், ஒரு தரப்பு ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தாலும், கலவையான விமர்சனம் வெளியாகி இருப்பதால் பீஸ்ட் பார்ட் 2 வேண்டாம் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். விஜய் ரசிகர்களுக்கே முழு மன நிறைவாக இல்லாததால், இப்படத்திற்கு இரண்டாம் பாகம் வேண்டாம் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.
பெரிய ஸ்டார்கள் - பெரிய பிரச்னை
இந்த நிலையில் பெரிய ஸ்டார்களை வைத்து இயக்குவதில் இருக்கும் பிரச்னை என்ன என்பதை பற்றி நெல்சன் முன்னதாக ஃபிலிம் கம்பேனியன் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருந்தார். அவர் அப்போது பகிர்ந்து கொண்டதாவது, “ ஹீரோ இல்லாமல் ஒரு சப்ஜெக்டை எடுத்து ஆர்டிஸ்டிக் படமாக எடுக்க முடியும். ஆனால் இங்கு ஒரு விஷயம் இருக்கிறது.
நமக்கு பிடித்த மாதிரி ஒரு படம் எடுக்க வேண்டுமென்றால் இங்கு எந்த பெரிய ஹீரோவும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். நமக்கு பிடித்த படமும், இங்கு இருக்கும் கமர்ஷியல் சார்ந்த படங்களும் வெவ்வேறு பாதையை கொண்டிருக்கின்றன. நாம் ஒரு ஹீரோவை அப்ரோச் செய்து ஒரு படத்தை இயக்கும் போது, நமக்கு எப்படி ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறதோ, அதே போல அந்த நாயகனுக்கும் இவ்வளவு நாள் உருவாக்கிய மார்க்கெட்டை வைத்து ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அவை இரண்டும் ஒரு பாய்ண்டில் இணையும் போதுதான், நாம் எதிர்பார்க்க கூடிய கமர்ஷியல் ஃபிலிம்மை எடுக்க முடியும். நமக்கு பிடிச்ச படத்தை நானே தயாரித்து இயக்குவதுதான் சரியான விஷயம். ஆனால் அதை இப்போதைக்கு நான் செய்கிற மாதிரி இல்லை.” என்று பேசினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்