Baakiyalakshmi Serial Today: எங்க அப்பாவ கூட்டிட்டுதான் போவேன்; சவால் விட்ட இனியா..பரபரப்பில் பாக்கிய லட்சுமி சீரியல்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றய எபிசோடில் என்ன நடக்கிறது. விவரம் உள்ளே
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் மத்தியில் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது.
நேற்றைய எபிசோடில் பாக்கியா இனியவை பார்ப்பதற்காக ராதிகா வீட்டிற்கு செல்ல கோபி இனியாவை பாக்கியாவின் கண்ணில் கூட காட்டாமல் அசிங்கப்படுத்தி அனுப்பி விடுகிறார். அழுது கொண்டே வீடு திரும்பும் பாக்கியா இனியாவை ஒரு முறை கண்ணில் காட்டி இருக்கலாம் என வேதனை பட குடும்பத்தில் உள்ள அனைவரும் கோபி மீது மிகுந்த கோபத்தில் இருக்கிறார்கள்.
அப்போது அங்கு வரும் கோபியின் அப்பா இனியாவிற்கு ஒரு சின்ன கீறல் கூட இல்லை. நீ கவலைப்படாதே என பாக்கியவை சமாதானப்படுத்தினார். தாத்தா இனியாவை என இப்படி செய்கிறாய் ஒரு தடவை உன்னோட அம்மாவை வந்து பார்த்து இருக்கலாம் இல்லையா என கேட்டதற்கு நான் அப்படி வெளியே வந்தால், டாடி கோபப்படுவார்; பிறகு நான் எப்படி அவரை நம்முடைய வீட்டிற்கு கூட்டி செல்ல முடியும் என சொல்ல, இதை கேட்ட ராதிகா அதிர்ச்சியடைகிறார். நேற்றைய எபிசோடு அத்துடன் முடிவடைந்தது.
இன்றைய எபிசோடில் ராதிகா இனியாவுடன் சென்று என்ன பேசுற நீ எனக்கும் கோபிக்கும் கல்யாணம் முடிந்துவிட்டது. உங்க அம்மாவை விவாகரத்து செய்துவிட்டார் அப்படி இருக்கும் போது நீ எப்படி உன்னோட அப்பாவை வீட்டிற்கு அழைத்து செல்ல முடியும் என கேட்க இனியா உடனே நான் நிச்சயமாக என்னுடைய டாடியை எங்கள் வீட்டிற்கு அழைத்து செல்வேன்.
எங்க அம்மாவை தானே அப்பாவுக்கு பிடிக்காது ஆனால் எங்களை பிடிக்கும். அவர் நிச்சயமாக என்னோடு வருவார். வாங்க தாத்தா நாம வீட்டுக்கு போகலாம் என இனியா கூற ராதிகா உடனே கோபி இல்லாத போது, நீ இங்கு இருந்து போகாதே அவர் கோபப்படுவார் என கூற உடனே இனியா அப்படியே போய்விடுவேன்னு நினைக்காதீங்க திரும்பவும் வருவேன்; என்னோட டாடி கூட தான் நான் வீட்டுக்கு போவேன் என கூறி விட்டு பாக்கியா வீட்டுக்கு செல்கிறார்கள் இனியாவும் தாத்தாவும்.
இனியவை பார்த்தவுடன் அனைவரும் வந்து கட்டியணைத்து ஆசையாக பேச இனியா எதுவும் பேசாமல் அமைதியாக நிற்கிறாள். என்னுடைய டிரஸ் எடுக்க தான் நான் இங்கு வந்தேன் என ரூமுக்கு செல்கிறாள். அங்கு உட்கார்ந்து அழுது கொண்டிருக்கும் இனியா ஜெனி வரவும் கண்ணீரை துடைத்து கொண்டு ட்ரெஸ்களை எடுப்பது போல பாவனை செய்கிறாள். அதற்கு பிறகு எழில் வந்து இனியா நீ அங்கு போக வேண்டாம் என சமாதானமாக பேச, உடனே அண்ணனை கட்டிக்கொண்ட இனியா நான் எல்லாரையும் மிஸ் பண்றேன். எனக்கு அம்மாவும் வேணும் அப்பாவும் வேணும். நான் டாடியோட தான் திரும்பி வருவேன். அவரு வரமாட்டார் என எழில் சொல்ல இல்லை நான் நிச்சயமாக அவரை இந்த வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வருவேன் என உறுதியாக சொல்லுகிறாள்.
மறுபக்கம் கோபி வீட்டுக்கு வந்தவுடன் ராதிகா அருகில் ஆசையை அமர்கிறார். உடனே ராதிகா இனியா வீட்டில் இல்லை என்று சொன்னதும் அதிர்ச்சியான கோபி, அவங்க இரண்டு போரையும் சண்டை போட்டு வீட்டை விட்டு அனுப்பிவிட்டாயா என சத்தம் போட உடனே ராதிகா நானா இனியவை வீட்டை விட்டு அனுப்பினேன். நான் மட்டும் போகமாட்டேன் என்னோட டாடி கூட தான் போவேன் என என்கிட்டேயே சவால் விடுகிறாள். டாடி இல்லாத போது அம்மாவை பார்க்க போகாதே அது தப்பு என கூறியும், கேட்காமல் போய்விட்டாள். நான் என்ன செய்ய முடியும் என ரூமுக்கு சென்று கதவை தாள் போட்டு கொள்கிறாள் ராதிகா. இதை பார்த்த கோபி அதிர்ச்சியில் உறைந்து போகிறார்.
சூட்கேசை பேக் செய்து கீழே இறங்கி வந்த இனியா, எழிலிடம் மட்டும் நான் போகிறேன் என கூறிவிட்டு வாங்க தாத்தா போகலாம் என கூற கலங்கி நிற்கிறார் பாக்கியா. அத்துடன் இன்றைய எபிசொட் நிறைவடைகிறது.