Ayesha Khan: அப்பாவை விட வயதில் மூத்தவரு செய்ற விஷயமா இது.. பிரபல நடிகைக்கு நேர்ந்த கதி
நான் அவர் என் அப்பாவுக்கு தெரிந்தவர்போல, அதனால் என்னை பார்த்து நிற்கிறார் என நினைத்து விட்டேன். ஆனால் அந்த நபர் என்னிடம் வேறு மாதிரி நடந்து கொண்டார்.
முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான ஆயிஷா கான் தன்னுடைய இளம் வயதில் தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் பற்றி நேர்காணல் ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார்.
திரைத்துறை மட்டுமல்லாது எல்லா துறைகளிலும் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்கதையாகி வருகிறது. மீ டூ அமைப்பு வந்த பிறகு இந்த பிரச்சினைகள் எல்லாம் வெளிப்படையாக பேசப்படுகின்றன. சினிமாவை பொறுத்தவரை பல பிரபலங்கள் வாய்ப்பு தேடும்போது தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை, தவறான பாதைக்கு அழைத்தல் போன்ற பிரச்சினைகளை பேசி வருவதால் ஓரளவு இது குறைந்து வருகிறது.
அந்த வகையில் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 17வது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக நடிகை ஆயிஷா கான் கலந்து கொண்டார். இவர் நேர்காணல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில் இளம் வயதிலேயே நடிக்க ஆரம்பித்து விட்ட நிலையில் இந்த துறையில் எப்போதாவது விரும்பத்தக்காத சம்பவத்தை எதிர்கொண்டீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது . அதற்கு பதிலளித்த ஆயிஷா கான் நான் பலமுறை எதிர்கொண்டிருப்பதாக தெரிவித்திருந்தார். சில சம்பவங்களையும் நினைவு கூர்ந்தார்.
View this post on Instagram
அதாவது, “ஒருநாள் என் வீடு அமைந்துள்ள கட்டடம் அருகே நின்று கொண்டிருந்தேன். அப்போது என் அப்பாவை விட வயதான ஒருவர் என்னை இருசக்கர வாகனத்தில் கடந்து சென்றார். நான் திரும்பி என்னுடைய வீட்டை நோக்கி நடந்து சென்ற நிலையில் அந்த நபர் வண்டியை நிறுத்தி விட்டார். நான் அவர் என் அப்பாவுக்கு தெரிந்தவர் போல, அதனால் என்னை பார்த்து நிற்கிறார் என நினைத்து விட்டேன். வண்டியை நிறுத்தி விட்டு என்னை நோக்கி வந்தவரிடம், என்ன அங்கிள்? என கேட்டேன்.
அதற்கு அவர் என்னுடைய மார்பகங்கள் அழகாக இருப்பதாக சொல்லிவிட்டு சென்று விட்டார். எனக்கு என்ன நடந்தது என சொல்லவே முடியாத அளவுக்கு நொந்துபோனேன். ஆனால் அந்த நபரோ மீண்டும் வண்டி அருகே சென்று விட்டு என்னை பார்த்து புன்னகைத்தார். ‘நான் இப்ப உன்கிட்ட என்ன சொல்லிட்டேன்’ என்கிற ரீதியில் அந்த பார்வைக்கான அர்த்தம் இருந்தது.என் உடலை பற்றிய அந்த கருத்து மிகவும் மோசமான நிகழ்வு என ஆயிஷா கான் தெரிவித்துள்ளார்.இந்த தகவல் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.