மேலும் அறிய

Ayalaan Glimpse: பறக்கும் தட்டில் இருந்து இறங்கிவரும் சிவகார்த்திகேயனின் ஏலியன் நண்பர்... மாஸ் காட்டும் அயலான் க்ளிம்ப்ஸ் வீடியோ!

பறக்கும் தட்டில் இருந்து ஏலியன் இறங்கி வரும் வகையிலான காட்சி இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள நிலையில், இணையத்தில் இந்த வீடியோ லைக்ஸ் அள்ளி வருகிறது.

சிவகார்த்திகேயனின் அயலான் படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இணையத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.

‘நேற்று இன்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்   ‘அயலான்’.24 ஏ.எம்.ஸ்டுடியோஸ், கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. 

இந்தப் படத்தில்  ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாக நடிக்க, சரத் கேல்கர், இஷா கோபிகர், யோகிபாபு, கருணாகரன்  உள்ளிட்டோர் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் படத்துக்கு இசையமைக்கிறார். 

ஏலியனுக்கும் மனிதனுக்கும் இடையேயான நட்புறவை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தின் பணிகள் கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கியது. ஆனால் பொருளாதார நெருக்கடி, தொடர்ந்து கொரோனா ஊரடங்கு, அனிமேஷன், விஎஃபெக்ஸ் பணிகள் ஆகியவற்றால் தடைகள், தேக்கம் ஏற்பட்டு வந்த நிலையில், படப்பணிகள் மெதுவாக நடைபெற்று வந்தன. 

இந்நிலையில் கடந்த ஆண்டு இந்தப் படத்தின் பணிகள் நிறைவுற்ற நிலையில், இந்த ஆண்டு படம் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகமாக வலம் வந்தனர்.

அயலான் திரைப்படம் முழு நீள லைவ் ஆக்‌ஷன் படமாக இப்படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இன்று காலை இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு  வெளியானது.

அதன்படி இந்த ஆண்டு தீபாவளி நாளான நவ.12ஆம் தேதி அயலான் படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு போஸ்டர்களும் வெளியாகின. சென்ற ஆண்டு தீபாவளி ரிலீசாக வெளியான ப்ரின்ஸ் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில், இந்த அறிவிப்பு சிவகார்த்திகேயன் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில், அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் அயலான் படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை சிவகார்த்திகேயன் தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பறக்கும் தட்டில் இருந்து ஏலியன் இறங்கி வரும் வகையிலான காட்சி இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள நிலையில், இணையத்தில் இந்த வீடியோ லைக்ஸ் அள்ளி வருகிறது.

படத்தின் பாடல் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget