Ashwin Kumar | நாயகி இல்லை.. பிரபுசாலமன் இயக்கம்.. தாறுமாறு பண்ணும் அஷ்வின்!
அஷ்வின் தன்னுடைய அடுத்த படத்திற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.
சமீபத்தில் வெளியாகி மிகவும் பிரபலமான ஒரு ரியாலிட்டி ஷோ, குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் மூலம் தனது தனித்துவமான பேச்சால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் புகழ். அவர் மட்டுமல்லாது, அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்றொரு நடிகரான அஷ்வினும் ரசிகர்கள் மத்தியில் செம ஹிட்டானார்.
குக் வித் கோமாளியில் நிகழ்ச்சியிலேயே இந்த இரண்டு பேரும் சேர்ந்து லூட்டி அடித்தால், மக்கள் அதிகமாக ரசித்தனர். இந்நிலையில், அறிமுக இயக்குனர் ஹரிஹரன் இயக்கி உருவாகி வரும் படத்தில் புகழ், அஷ்வின் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் அஷ்வின் தன்னுடைய அடுத்த படத்திற்கு ஒப்பந்தமாகியுள்ளார். கும்கி புகழ் இயக்குநர் பிரபு சாலமன், அஷ்வினை இயக்கவுள்ளார். சோஷியல் ட்ராமாவாக உருவாகும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபரில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு பேசிய அஷ்வின், '' இது என்னுடைய சினிமா வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும். இந்த படத்தின் என்னுடைய கேரக்டரை காண நான் ஆவலாக உள்ளேன். மேற்கொண்டு இப்படம் குறித்து எதுவும் கூறமுடியாது. பிரபு சாலமன் படம் எப்போதும் ஒரு கருத்தை முன் வைக்கும் . இப்படத்திலும் கருத்து இருக்கிறது. எனக்கான கதாபாத்திரத்தை என்னை வைத்தே பிரபு சாலமன் உருவாக்கியுள்ளார். அவரது எதிர்பார்ப்பை நான் பூர்த்தி செய்வேன். இப்படத்தில் நாயகி இல்லை. கோவை சரளா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகி -நாயகன் என்ற வழக்கமான படமாக இல்லாமல் இருப்பதே தனி சேலஞ்ச் தான். அதனை ஏற்று சிறப்பாக செய்வேன் என்றார்.
View this post on Instagram
இப்படத்துக்கு நிவாஷ் கே பிரசன்னா இசையமைக்கவுள்ளார். இது குறித்து பேசிய அஷ்வின், அவரும் நானும் சினிமாத்துறையில் நுழைந்தது முதலே நண்பர்கள் தான். ஆனால் இப்படத்தில் நான் நடிக்கிறேன் என அவருக்கோ, அவர்தான் இசையமைப்பாளர் என எனக்கோ தொடக்கத்தில் தெரியாது. இருவருக்குமே இது சர்ப்ரைஸ். இணைந்து பணியாற்ற வேண்டுமென நாங்கள் திட்டமிட்டிருந்தாலும் இப்படியான வாய்ப்பு கிடைத்திருக்காது என்றார்.
View this post on Instagram