Arya 34th Movie: 8 பிரபலங்கள் வெளியிட்ட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்... ஆர்யாவுக்கு கைக்கொடுக்குமா காதர் பாட்சா?
நடிகர் ஆர்யா நடிக்கவுள்ள 34வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நடிகர் ஆர்யா நடிக்கவுள்ள 34வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களில் ஒருவரான ஆர்யா நடிப்பில் கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி ‘கேப்டன்’ படம் வெளியானது. ஏலியன்களை மையப்படுத்தி சக்தி சௌந்தர் ராஜன் இயக்கிய இப்படம் படுதோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து ஆர்யா சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ’காஃபி வித் காதல்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். முன்னதாக 2021 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் சார்பட்டா பரம்பரை வெளியாகி சூப்பர் ஹிட்டான நிலையில், அவர் இதுபோன்ற வலுவான கதைகளை தேர்வு செய்ய வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
View this post on Instagram
இதற்கிடையில் தான் ஆர்யாவின் 34வது படம் குறித்த அறிவிப்பு வெளியானது. டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் சார்பில், இயக்குநர் முத்தையா இந்த படத்தை இயக்கவுள்ளார் என்றும், இதில் ஹீரோயினாக சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்த சித்தி இதானி நடிக்கவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் பூஜை கடந்த மாதம் நடைபெற்ற நிலையில் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக தொடங்கியது.
எப்போது கிராமத்து கதைகளை கையிலெடுக்கும் முத்தையா இம்முறையும் ஆர்யாவுக்கு அதே கதைக்களத்தை தான் தேர்வு செய்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. அதன்படி படத்திற்கு “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சுவரில் வரையப்பட்ட பாட்ஷா பட ரஜினியின் ஓவியத்துக்கு முன்னால் கெத்தாக கருப்பு நிற உடையில் ஆர்யா அமர்ந்திருப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.
Here is the first look poster of #KEMTheMovie, @arya_offl is here to impress with this intense and power-packed film 🔥#KatharBashaEndraMuthuramalingam@arya_offl @dir_muthaiya @SiddhiIdnani @gvprakash @VelrajR @zeestudiossouth @DrumsticksProd @venkatraj11989 pic.twitter.com/8v9f2JrjR0
— Drumsticks Productions (@DrumsticksProd) December 10, 2022
ஆர்யாவை பார்ப்பதற்கு பட்டியல் படத்தில் நடித்த தோற்றத்தைப் பார்ப்பது போல உள்ளது. மேலும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர்கள் கார்த்தி, விஷால், மாதவன், சந்தானம், ஜீவா, அருண் விஜய், இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், வெங்கட் பிரபு ஆகிய 8 பேரும் வெளியிட்டு படக்குழுவுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இதனிடையே இந்த படம் மீண்டும் வெற்றிப் படங்களின் பட்டியலில் ஆர்யாவை சேர்க்குமா என்ற எதிர்பார்ப்பை ரசிகர்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளது.