Arjun Kapoor Comment: 12 வயது வித்தியாசம்.. நீளும் லிவ் இன் ரிலேசன்ஷிப்.. தொடரும் ட்ரோல்கள்.. காட்டமாக பேசிய அர்ஜூன் கபூர்..!
கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து 12 வருடங்களாக லிவ் இன் ரிலேசன்ஷிப்பில் இருக்கும் ஹிந்தி நடிகை மலைக்கா அரோராவும் நடிகர் அர்ஜுன் கபூரும் பல முறை நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து 12 வருடங்களாக லிவ் இன் ரிலேசன்ஷிப்பில் இருக்கும் ஹிந்தி நடிகை மலைக்கா அரோராவும் நடிகர் அர்ஜுன் கபூரும் பல முறை நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். காரணம், இருவருக்கும் இடையேயான வயது இடைவெளி. ஆம் அர்ஜுன் கபூருக்கும் (வயது 36) மலைக்கா அரோராவுக்கும் ( வயது 48) இருவருக்கு இடையிலான வயது வித்தியாசம் 12 வருடங்கள். இந்த நிலையில் இந்த வயது வித்தியாசம் குறித்தான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அர்ஜூன் கபூர் ஹிந்தி சேனல் ஒன்றிற்கு பேசியிருக்கிறார்.
View this post on Instagram
அந்தப் பேட்டியில் அவர் பேசும் போது, "மக்களுக்கு கருத்துக்கள் இருக்கும். காரணம் அவர்கள் அந்தக்கருத்தை நேசிக்கிறார்கள். இந்தியாவை பொருத்தவரை, நமக்கு மற்றவர்களை பற்றி பேசுவது என்பது மிகவும் பிடித்தமான ஒன்று. அப்போது நாம் ஜனனிகளாக (இந்தியில் வயதான தாயைக் குறிக்கும் சொல்) மாறிவிடுகிறோம்.
View this post on Instagram
நாம் அவர்களை பற்றி பேசும்போது, அவர்கள் எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறார்கள், அவர்கள் ஒன்றாக அழகாக இல்லை, இந்த உறவு முடிவுக்கு வந்துவிடும், அவள் அவனிடம் அப்படி என்ன கண்டு விட்டாள், தொழில் பாழாகிவிடும் என்பன குறித்து விவாதம் செய்கிறோம். ஒரு வெள்ளிக்கிழமை அல்லது ஒரு நேர்காணலில் நீங்கள் உங்களை விளக்கினால் போதும். மக்கள் உங்கள் மீது வைத்திருக்கும் கருத்து மாறுவதற்கு அதிக நேரம் எடுக்கும்." என்று பேசியிருக்கிறார்.