AR Rahman: மூஞ்ச பாரு.. கசாப்பு கடையா வச்சுருக்கேன்! டிடி-யை அலறவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்!
தன்னை பெரிய பாய் என்று அழைப்பது பிடிக்கவில்லை என்றும், தான் என்ன கசாப்பு கடையா வைத்துள்ளேன்? என்றும் ஏ.ஆர்.ரஹ்மான் பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவின் பெருமையை உலக அரங்கில் எடுத்துச் சென்றவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். ஆஸ்கர் விருது பெற்று தமிழ்நாட்டை உலக அரங்கில் பெருமைப்பட வைத்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் சமீபத்தில் தேவதர்ஷினிக்கு அளித்த பேட்டி அளித்திருந்தார்.
மூஞ்ச பாரு:
அந்த பேட்டியின்போது தொகுப்பாளரும், நடிகையுமான தேவதர்ஷினி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் நம்ம பெரிய பாய்யோட பாட்டுக்கு யாரு நோ சொல்லுவா? என்று கூறுவார். அப்போது, சிரித்துக்கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான் என்னது பெரிய பாய்யா? என்று கேட்டார். அதற்கு பதிலளித்த தொகுப்பாளர் திவ்யதர்ஷினி என்ன சார் உங்களுக்கு தெரியாதா?உங்களோட செல்லப்பேரே அதுதான் என்று கூறுவார்.
#DD ~ Periya Bhaii#ARRahman ~ Periya Bhai ah? #DD : That's your nickname sir #ARRahman : "Vendam… enaku pidikala! Periya Bhai, Chinna Bhai nu… naa enna kasappu kadai ah vachutu iruken?"
— Gokul Cine Update 🗿 (@2024Gokul) May 20, 2025
— ARR in peak subtle savage mode#ARRahman #PeriyaBhai #DDShow pic.twitter.com/I9GDlp7uEM
அதற்கு உடனே ஏ.ஆர்.ரஹ்மான் வேண்டாம் எனக்கு பிடிக்கல. பெரிய பாய், சின்ன பாய்னு.. நான் என்ன கசாப்பு கடையா வச்சுருக்கேன். மூஞ்ச பாரு என்று சிரித்துக்கொண்டே கூறுவார். ஏ.ஆர்.ரஹ்மான் இதுபோல மகிழ்ச்சியாக பேட்டி அளித்தது இதுவே முதன்முறை ஆகும். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரசிகர்கள் தந்த பட்டம்:
ரோஜா படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, இந்தி என இந்தியாவில் பிரபலமானது மட்டுமின்றி ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்து உலகளவில் பிரபலமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவரை ரசிகர்கள் அன்புடன் பெரிய பாய் என்று அழைக்கின்றனர். இந்த நிலையில், அவர் தன்னை அவ்வாறு அழைப்பது பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது மிகவும் பிரபலம் ஆகி வருகிறது.
அடுத்தடுத்து காத்திருக்கும் படங்கள்:
தற்போது, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் லாகூர் 1947, தக் லைஃப் படங்கள் வெளியாக உள்ளது. மேலும், ஏராளமான இந்தி படங்களுக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ள ஏ.ஆர்.ரஹ்மான், தமிழில் ஜீனி, மூன் வாக், தனுஷ் - மாரிசெல்வராஜ் இணையும் படங்களுக்கு இசையமைக்கவும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக மட்டுமின்றி பின்னணி பாடகராகவும் ஏராளமான பாடல்களையும் பாடி அசத்தியுள்ளார்.





















