A.R.Rahman: ஷாக் ஆகாதீங்க...ஒரு பாடலை பாடுவதற்கு இவ்வளவு பணமா..? இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பாடகர் யார்?
இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பாடகர்களில் முதலிடத்தில் இருக்கிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்
இந்திய சினிமாவில் நிறைய பிரபலமான பாடகர்கள் இருக்கிறார்கள். பாலிவுட்டில், அர்ஜித் சிங், ஷ்ரேயா கோஷல் அனைத்து மொழிகளிலும் பாடி வருகிறார்கள். இவர்களில் யார் ஒரு பாடலுக்கு அதிக சம்பளம் வாங்குகிறார் என்கிற கேள்வி வந்தால் அந்தப் பட்டியலில் யாருமே இடம்பெறாமல் நாம் எதிர்பார்க்காத ஒருவர் முன் வரிசையில் நிற்கிறார்.
அதிக சம்பளம் வாங்கும் பாடகர்:
அது வேறு யாரும் இல்லை. இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தான். இசையமைப்பாளராக யார் அதிக சம்பளம் வாங்குகிறார் என்றால் கூட நாம் ஏ ஆர் ரஹ்மானை சொல்லலாம் ஆனால் ஒரு பாடலைப் பாடுவதற்கு அதிக சம்பளம் வாங்குகிறார் என்றால் நம்பமுடியவில்லை தான். அண்மையில் இந்திய சினிமாவில் ஒரு பாடலை பாடுவதற்கு அதிக சம்பளம் வாங்குவதில் முதலிடத்தில் இருப்பவர் ஏ.ஆர் ரஹ்மான என்று தகவல் வெளியானது. ஒரு பாடலைப் பாடுவதற்கு 3 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறாராம் ரஹ்மான்.
இந்தத் தகவல் ரசிகர்கள் அனைவரையும் வாய்பிளக்கச் செய்துள்ளது. ஏற்கனவே ஏ ஆர் ரஹ்மான் படங்களுக்கு இசையமைக்க ஒரு பெரிய தொகையை சம்பளமாக பெறுகிறார் என்று நமக்குத் தெரியும். இருந்தும் அவரை தங்களது படங்களுக்கு இசையமைக்க காத்திருக்கிறார்கள் இயக்குநர்கள். அந்த அளவிற்கு தவிர்க்கவே முடியாதவராய் உருவாகி நிற்கிறார் ரஹ்மான். தற்போது ஒரு பாடலுக்கு 3 கோடி சம்பளம் என்கிற தகவல் ஆச்சரியமளிக்கக் கூடியதாக வந்து சேர்ந்திருக்கிறது.’ இதன் காரணத்தினாலே தான் இசையமைக்கும் பாடல்களில் மட்டுமே பாடி வருகிறார் ரஹ்மான்.
ரஹ்மானின் பயணம்
இன்று ரஹ்மான் இந்த இடத்தில் இருக்கிறார் என்றால் அதற்கு அவரது அபரிமிதமான உழைப்பும் திறமையும் தான் காரணம்.1992 ஆம் ஆண்டு மனிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார் ரஹ்மான். அன்று தொடங்கி இன்று வரை இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருந்து வருகிறார் ரஹ்மான்.
அதுவரை இளையராஜா தமிழ் சினிமாவை ஆக்கிரமித்திருந்த சூழலில் இளையராஜாவுக்கு நிகராக இன்று உருவாகி நிற்கிறார். கர்நாடக மற்றும் இந்துஸ்தானி இசையில் தேர்ச்சி பெற்றவர் ரஹ்மான். மேலும் இசையில் தொழில் நுட்பத்தை மிகச் சிறந்த முறையில் பயன்படுத்தியவர் ரஹ்மான். அதனால் தான் இவ்வளவு அதிகமாக சம்பளப் கொடுத்து அவரை தங்களது படங்களுக்கு இசையமைக்க கேட்டுக்கொள்கிறார்கள் அனைத்து தயாரிப்பாளர்களும்.
மாமன்னன்
தற்போது ரஹ்மான் இசையமைத்து வெளியாகியிருக்கும் படம் மாமன்னன். இந்தப் படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. நடிகர் வடிவேலு ஒரு பாடலையும் , ரஹ்மானின் மகனான ஏ.ஆர். அமீன் ஒரு பாடலையும், விஜய் யேசுதாஸ் மற்றும் சக்திஸ்ரீ கோபாலன் இருவரும் இணைந்து ஒரு பாடலையும் பாடியுள்ளார்கள்.