அனுஷ்கா ஷெட்டியை படுகைக்கை அழைத்த தயாரிப்பாளரை போட்டுக் கொடுத்த சம்பவம்!
தன்னை படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர் பற்றி நீண்ட நாட்களுக்கு பிறகு அனுஷ்கா ஷெட்டி போட்டுக் கொடுத்த சம்பவம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. விக்ரம், விஜய், சூர்யா என்று மாஸ் ஹீரோக்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்தார். பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய பிரம்மாண்டமான படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். சினிமாவின் ஆரம்பத்தில், முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக கவர்ச்சி காட்டி நடித்த அனுஷ்கா ஷெட்டி, அதன் பிறகு ஹீரோயினுக்கான கதைக்களத்தை தேர்வு செய்து நடிக்க துவங்கினார்.
இந்நிலையில் திரையுலகில், நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் காலம் காலமாக இருப்பதாக பலர் வெளிப்படையாகவே கூறியுள்ள நிலையில், அனுஷ்கா ஷெட்டியும் அதனை எதிர்கொண்டுள்ளார்.
அவர் சினிமாவில் நடிக்க துவங்கிய ஆரம்ப காலங்களில், தயாரிப்பாளர் அனுஷ்கா ஷெட்டி மீது ஆசைப்பட்டுள்ளார். மேலும் ஒரு நாள் இரவு மட்டும் தன்னுடன் இருந்தால் கோடிக் கணக்கில் பணம் தருகிறேன் என்று கூறியிருக்கிறார். மேலும், அவரை பல முறை தொந்தரவும் செய்திருக்கிறார்.

சினிமாவின் ஆரம்பகாலகட்டங்களில் பட வாய்ப்புக்காக போராடிக் கொண்டிருந்தார் அனுஷ்கா. அதையே காரணமாக வைத்து, அனுஷ்கா மீது இருந்த மோகத்தால் அவரை எப்படியாவது அடைய வேண்டும் என்று அந்த தயாரிப்பாளர் தான் அவருக்கான வாய்ப்புகளை எல்லாம் கெடுத்து விட்டாராம். அந்த தயாரிப்பாளர் வேறு யாருமில்லை தெலுங்கு சினிமாவைச் சேர்ந்த ஒரு முன்னணி தயாரிப்பாளர் என அனுஷ்கா பெயரை குறிப்பிடாமல் கூறியுள்ளார்.
சினிமாவில் பல கஷ்டங்களை சந்தித்தபோதும், அவரின் ஆசைக்கு இணங்கவில்லை என்றும்... தான் போராடி முன்னணி இடத்திற்கு வந்த பின்னர் அவர் தன்னை எந்த தொந்தரவும் செய்யவில்லை என கூறியுள்ளார். அந்த தயாரிப்பாளர் யாராக இருக்கும் என்பதே இப்போது பலரின் கேள்வியாகவும் உள்ளது?.





















