Anushka Sharma: அனுமதியின்றி புகைப்படத்தை பயன்படுத்திய பூமா... பொங்கி எழுந்த நடிகை அனுஷ்கா சர்மா
தன் அனுமதியின்றி தனது புகைப்படங்களை விளம்பரத்துக்காக உபயோகித்த பூமா இந்தியா நிறுவனத்துக்கு கண்டனம் தெரிவித்து அனுஷ்கா சர்மா பதிவிட்டுள்ளார்.

தன்னிடம் அனுமதி பெறாமல் தன் புகைப்படத்தைப் பயன்படுத்திய பூமா நிறுவனத்துக்கு நடிகை அனுஷ்கா சர்மா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான பூமா, விளையாட்டு வீரர்களுக்கான காலணிகள், ஆடைகள் உள்ளிட்டவற்றைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
70 ஆண்டுகள் பழமையான இந்நிறுவனம், உலகின் டாப் 100 பிராண்டுகளுள் ஒன்றாக தொடர்ந்து கொடிக்கட்டி பறந்து வருகிறது.
இந்நிலையில், தன் அனுமதியின்றி தனது புகைப்படங்களை விளம்பரத்துக்காக உபயோகித்த பூமா இந்தியா நிறுவனத்துக்கு கண்டனம் தெரிவித்து பிரபல பாலிவுட் நடிகையும், முன்னாள் இந்தியக் கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியின் மனைவியுமான நடிகை அனுஷ்கா சர்மா பதிவிட்டுள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு பூமா உடை உடுத்தி அனுஷ்கா சர்மா புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்நிலையில், அனுஷ்காவின் அனுமதியின்றி இந்தப் புகைப்படத்தை எடுத்து பூமா நிறுவனம் விளம்பர நோக்கில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
இந்நிலையில், “பூமா இந்தியா...எனது படத்தை விளம்பரத்துக்காக பயன்படுத்துவதற்கு முன் நீங்கள் அனுமதி பெற வேண்டும் என்று உங்களுக்குத் தெரியும். நான் உங்கள் விளம்பரத் தூதுவர் இல்லை என்பதால் தயவு செய்து அதை நீக்குங்கள்" என்று தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அனுஷ்கா சர்மா பகிர்ந்துள்ளார்.

அனுஷ்காவில் இந்தப் பதிவுக்குப் பிறகும் பூமா இந்தியா அனுஷ்காவின் புகைப்படத்தை நீக்காமல் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: FIFA 2022: மலையாள சூப்பர் ஸ்டார்கள் டூ பாலிவுட் நடிகர்கள் வரை... உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நேரில் கண்டுகளித்த பிரபலங்கள்!





















