Sai Pallavi : பசங்க கூட ஆடுனா கல்யாணம் நடக்காதுனு சொன்னாங்க...நடிகை சாய் பல்லவி ஓப்பன் டாக்
விஜய் தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதே தனது உறவினர்களிடம் நிறைய எதிர்ப்பு வந்ததாக நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார்
சாய் பல்லவி
முதல் படத்திலேயே பட்டிதொட்டி எல்லாம் வைரலாகியார் சாய் பல்லவி. இன்றைய சூழலில் பெரும்பாலான நடிகைகள் ஒரே படத்தில் வைரலாவது அவ்வளவு பெரிய விஷயமாக தெரியாமல் இருக்கலாம். ஆனால் ரசிகர்கள் மனதில் தனது நடிப்பால் நிலைத்த நிற்கக் கூடியவர்கள் ஒரு சிலரே. அந்த ஒரு சிலரில் சாய் பல்லவி ஒருவர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார் சாய் பல்லவி. அவர் மருத்துவ படிப்பு படித்துக் கொண்டிருந்தபோது இயக்குநர் அல்ஃபோன்ஸ் புத்திரன் அவரை பிரேமம் படத்தில் நடிக்க கேட்டார். இதற்கு சாய் பல்லவி முதலில் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து சமீபத்தீய நேர்காணல் ஒன்றில் அவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.
பசங்ககூட ஆடுனா கல்யாணம் ஆகாது
#SaiPallavi Recent Interview 💥
— Movie Tamil (@MovieTamil4) October 23, 2024
- I never agreed to act in #Premam at first.
- Director #AlphonsePuthren called me. Even after that I didn't believe it.
- I thought that the girl studying medicine asked me that there is no one in the cinema.#Amaranpic.twitter.com/yTUDnWM7JI
" நேரம் படத்திற்காக எனக்கு ஃபோன் செய்தபோது எத்தனையோ நடிகைகள் இருக்கும்போது மெடிக்கல் படித்துக்கொண்டிருக்கும் என்னை ஏன் கேட்கப்போகிறார்கள். இது ஸ்பாம் காலாக இருக்கும் என்று நினைத்தேன். அதன் பின் தான் இயக்குநர் அல்ஃபோன்ஸ் புத்திரன் என்னிடம் பேசினார். நான் நேரம் என்கிற படத்தை எடுத்திருக்கிறேன் விகிப்பீடியாவில் பாருங்கள் என்று சொன்னார். அதன் பின் நாங்கள் பேசினோம். எனக்கு இருந்த கண்டிஷன்களை எல்லாம் நான் சொன்னேன். காஸ்டியூம் , இண்டிமேஸி காட்சிகள் பற்றி எல்லாம் பேசினோம். நான் நிறைய கட்டுப்பாடுகள் உள்ள சமூகத்தைச் சேர்ந்தவள். விஜய் டிவியில் நான் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியில் ஆடும்போதே என் உறவினர்கள் நிறைய பேர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். பசங்க கூட சேர்ந்து ஆடினால் கல்யாணம் ஆகாது என்று சொன்னார்கள். அதனால் ஒரு படத்திற்காக கேட்டபோது இன்னும் நிறையவே பயம் இருந்தது. ஆனால் என்ன தைரியத்தில் விட்டார்கள் என தெரியவில்லை" என சாய்பல்லவி தெரிவித்துள்ளார்