Alya manasa Boy Babe: மீண்டும் தாயானார் ஆல்யா.. பூரிப்படையும் சஞ்சீவ்.. வைரல் புகைப்படம்..!
பிரபல சீரியல் நடிகையான ஆல்யா மானசாவிற்கு இராண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.
![Alya manasa Boy Babe: மீண்டும் தாயானார் ஆல்யா.. பூரிப்படையும் சஞ்சீவ்.. வைரல் புகைப்படம்..! Alya manasa Sanjeev blessed with Boy baby Alya manasa Boy Babe: மீண்டும் தாயானார் ஆல்யா.. பூரிப்படையும் சஞ்சீவ்.. வைரல் புகைப்படம்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/27/279f402fcfc2b865fbccc1b170bdbde9_original.webp?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பிரபல சீரியல் நடிகையான ஆல்யாவிற்கு இராண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.
View this post on Instagram
இது குறித்து ஆல்யா இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ நாங்கள் ஆண்குழந்தையால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளோம். தாயும் சேயும் நலமாக இருக்கிறோம்” என்று பதிவிடப்பட்டுள்ளது.
சந்தியாவாக அறிமுகமான ரியா
விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலுக்கு தனி மவுசு உண்டு. அத்தனை மவுசுக்கும் காரணம் அதில் சந்தியாவாக நடித்த ஆல்யா மானசா என்றால் அது மிகையல்ல. இந்நிலையில்தான் இரண்டாவது பிரசவத்துக்காக பிரேக் எடுத்தார் ஆல்யா. இந்த கேப்பில் ரியா என்ற நடிகை சந்தியாவாக நடிக்க ஒப்பந்தமானார். இந்த மாற்றத்தினால் அடிக்கடி ரியாவுடன் கூடிய புரோமோக்கள் விஜய் டிவியில் வந்து செல்கின்றன. ஆனாலும் ரசிகர்களுக்கு ஆல்யா மானசா மீதுதான் மொத்த பாசமும் இருக்கிறது.
இந்நிலையில் ட்விட்டரில் ஒரு ரசிகர் ரியா நீங்கள் தற்காலிகமாகத் தான் இந்த சீரியலில் இருப்பீர்கள் என்று சொல்லுங்கள் என்று கூறினார். அதற்கு ரியா.. சாரி.. பெர்மனன்ட் ( மன்னித்துவிடுங்கள். நான் தான் இனி நிரந்தரம் என்று கூறியுள்ளார்.) இது ராஜா ராணி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆல்யாவை அறியாதவர் உண்டோ? மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள பல சீரியல்களில் ஒன்று ராஜா ராணி 2. பல திருப்பங்களுடன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கென தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. 2019ம் ஆண்டு முடிவடைந்த ராஜா ராணி சீரியலின் இரண்டாம் பாகமாக இது ஒளிபரப்பாகி வருகிறது.
13 ஆயிரம் சம்பளம்
கூட்டுக் குடும்பம் கதையை மையமாக வைத்தே இந்த சீரியல் நகர்ந்து வருகிறது. இதிலும் நாயகியாக ஆல்யா மானசா நடித்து வருகிறார். ராஜா ராணி சீரியல் மூலமாக பாப்புலர் ஆன ஆல்யா மானசா, முதல் பாகத்தில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ரகசியமாக அவர்கள் திருமணம் செய்து கொண்டாலும் சில மாதங்களுக்குப் பிறகு வெளிப்படையாக அறிவித்தனர். அவர்களுக்கு தற்போது ஐலா என்கிற இரண்டு வயது மகளும் இருக்கிறார். இந்த நிலையில்தான் மீண்டும் கர்ப்பமானார் ஆல்யா.
கர்ப்பக்காலம் 8 மாதங்களைக் கடந்துவிட்ட நிலையில், சில வாரங்கள் முன்பு வரை அவர் சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார். தற்போது விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிவரும் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியாவுக்கு நாயகனாக திருமணம் சீரியல் புகழ் சித்து நடித்து வருகிறார். சந்தியாவுக்குள்ள வரவேற்பின் காரணமாகவே, சந்தியாவாக நடிக்கும் ஆல்யாவுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.13 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)