Alia Bhat: வாந்தி, குமட்டல்.. இன்னொரு பக்கம் தொழில்.. கர்ப்பகால கஷ்டங்களை பகிர்ந்த ஆலியா பட்!
வேலை முக்கியமானது தான் என்றாலும் எனது ஆரோக்கியத்திற்கும் குழந்தைக்குமே முன்னுரிமை கொடுக்க முடிவு செய்தேன் - ஆலியா பட்
தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமின்றி, திரைவாழ்விலும் இந்த ஆண்டு ஒரு சிறப்பான ஆண்டாக ஆலியா பட்டிற்கு அமைந்தது. திரைவாழ்கையில், ‘கங்குபாய் கத்தியவாடி’, ‘ஆர்ஆர்ஆர்’, ‘பிரம்மாஸ்திரா’, ‘டார்லிங்ஸ்’ மற்றும் ‘ஹாலிவுட் என்ட்ரி ஹார்ட் ஆஃப் ஸ்டோன்’ என அடுத்தடுத்த வெற்றிகள் ஆலியாவிற்கு கைவசம் ஆகின;
ஏப்ரல் மாதம் ரன்பீர் கபூருடன் கைகோர்த்த ஆலியா பட், நவம்பர் மாதம் தன்னுடைய குழந்தையான ராஹாவை வரவேற்றார்; இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவும் சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது; இந்த நிலையில் தன்னுடைய கர்ப்ப கால நினைவுகள் குறித்து ஆலியா சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், “என்னுடைய வேலை கடமைகளை முடிக்க வேண்டும் என்பதற்காக மிகவும் கடுமையாக எனது உடலையும் முன்னோக்கி செலுத்தினேன்; குழந்தை வந்த பிறகும் இரவு பகல் பாராமல் உழைத்தேன். கர்ப்பமாவதை யாராலும் கணிக்க முடியாது; அதனால் சில கட்டுப்பாடுகள் தவிர்க்க முடியாமல் போனது.
ஒவ்வொரு நாளையுமே எனது உடலை கேட்டே முடிவு செய்தேன். வேலை முக்கியமானது தான் என்றாலும் எனது ஆரோக்கியத்திற்கும் குழந்தைக்குமே முன்னுரிமை கொடுக்க முடிவு செய்தேன். என்னால் முடிந்தால் மட்டுமே உடல் ஒத்துழைத்தால் மட்டுமே, முன்னேறி செல்வேன் என முடிவு செய்தேன். ஆனால் உடல் ரீதியாக நான் எந்த ஒரு தடங்கல்களையும் சந்திக்கவில்லை. முதல் சில வாரங்கள் குமட்டல் மற்றும் சோர்வு ஏற்பட்டது. ஆனால் நான் அதை பற்றி யாரிடமும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. எனது கர்ப்பம் குறித்து 12 வாரங்களுக்கு வெளியில் தெரிவிக்காமல் இருந்தேன்" என கூறினார் ஆலியா பட்.
View this post on Instagram
மேலும் ஆலியா கூறுகையில் "பல வருட உழைப்பிற்கு கிடைத்த மாபெரும் வெற்றியை இந்த ஆண்டு அனுபவித்தேன். மிகுந்த நம்பிக்கையுடன் செய்யும் போது அதற்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்றால் மனம் தளர்ந்து விடும்; ஒரு நடிகராக என்னால் முயன்ற அளவிற்கு என்னுடைய பெஸ்ட்டை கொடுக்கலாம், ஆனால் இறுதியாக அவை அனைத்தும் பார்வையாளர்களின் கையில் தான் உள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டு என்னுடைய வாழ்க்கையில் அனைத்துமே மிகவும் நல்லதாக நடந்தது என்பதில் மிக்க மகிழ்ச்சி" என்றார் ஆலியா பட்