Samantha Health: சமந்தாவிற்கு நாக சைதன்யாவின் சகோதரர் அனுப்பிய ஆறுதல் செய்தி!
சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவின் சகோதரரான அகில் அக்கினேனி சமந்தாவிற்கு "எல்லா அன்பும், தைரியமும் உங்களுக்கு டியர் சாம்" என அழகான பதிவை பதிவிட்டுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை சமந்தா தற்போது 'மயோசிடிஸ்' எனும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோய் கோளாறு உள்ளவர்களுக்கு தசை, மூட்டுகள் பாதிப்பு ஏற்படும். அண்மையில் தான் நடிகை சமந்தா தான் ஒரு 'மயோசிடிஸ்' எனும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்தார். இந்த பாதிப்பில் இருந்து வெளிவந்த பிறகு இதை தெரிவிக்கலாம் என நினைத்தவர் சிகிச்சை காலம் முடிவடைய சற்று அதிகரிக்கலாம் என்பதால் இந்த தகவலை மக்களிடம் பகிர்வது அவசியம் என்பதால் இந்த தகவல் சமீபத்தில் பகிர்ந்தார். சமந்தாவிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் அவர் வேகமாக குணமடைந்து வருவதாக தெரிவித்துள்ளனர். அவரின் இந்த உருக்கமான பதிவு ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும் நடிகை சமந்தா விரைவில் குணமடைந்து திரும்ப தங்களது வாழ்த்துக்களை சோசியல் மீடியா மூலம் தெரிவித்து வருகிறார்கள்.
திரைபிரபலங்கள் வாழ்த்து :
ரசிகர்கள் மட்டுமின்றி திரை பிரபலங்கள் பலரும் நடிகை சமந்தாவிற்கு ஆறுதலையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவின் சகோதரரான அகில் அக்கினேனி தனது ஆறுதலான வாழ்த்தினை தெரிவித்துள்ளார். "எல்லா அன்பும், தைரியமும் உங்களுக்கு டியர் சாம்" என ஒரு அழகான பதிவை பதிவிட்டுள்ளார் நடிகர் அகில் அக்கினேனி. இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் நடிகை ஸ்ரேயா சரண், ஹன்சிகா மற்றும் பல பிரபலங்களும் நடிகை சமந்தாவிற்கு விரைவில் குணமடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
View this post on Instagram
விரைவில் குணமைடைய வேண்டும் :
சமீபத்தில் தான் நடிகை சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள 'யசோதா' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து சாகுந்தலம் திரைப்படமும் வெளிவர உள்ளது. விரைவில் குணமடைந்து நடிகை சமந்தா முழு ஸ்ட்ரென்த்துடன் திரும்பி வரவேண்டும் என்பதே ரசிகர்களின் பிரார்த்தனை.
View this post on Instagram