அஷ்வினை ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்.. மெசேஜ் சொன்ன தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு
அனுபவக் குறைபாட்டால் நிகழ்ந்த ஒரு சிறுதவறை பெருந்தன்மையுடன் நாம் கடந்து செல்வோமாக - தயாரிப்பாளர் பிரபு
ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘என்ன சொல்ல போகிறாய்’. இதில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலமும், குட்டி பட்டாஸ் பாடல் மூலமும் பிரபலமான அஸ்வின் குமார் நாயகனாக நடித்துள்ளார். அவந்திகா, தேஜு அஸ்வினி, 'குக் வித் கோமாளி' புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை ஹரிஹரன் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஆறாம் தேதியன்று சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு பேசினர்.
அப்போது பேசிய அஸ்வின், “நான் கதை கேட்கும்போது பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன். 40 கதைகளைக் கேட்டுத் தூங்கியிருக்கிறேன். இந்த இயக்குநர் முதலில் ஒரு கதை சொன்னார் அதை பண்ண முடியாது என்று சொல்லிவிட்டேன். நான் தூங்காமல் கேட்ட ஒரே கதை ‘என்ன சொல்ல போகிறாய்’ மட்டும்தான்” என்று கூறியிருந்தார்.
அஷ்வினின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. முதல் படத்துக்கே இந்தப் பேச்சா என்றும் அவரை ட்ரோல் செய்து, அஷ்வினை மீம் மெட்டீரியலாக மாற்றினர் நெட்டிசன்ஸ்.
நிலைமை விபரீதம் ஆவதை உணர்ந்துகொண்ட அஸ்வின், “நான் ஆணவம் பிடித்தவன் அல்ல. நான் பேசியது இந்த அளவு மோசமான விளைவை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை. அதற்குப் பின்னாலிருக்கும் உணர்வுகளை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. எனினும், அதில் எந்த நோக்கமும் இல்லை. நான் கதைகளின் எண்ணிக்கையைச் சற்று மிகைப்படுத்திச் சொல்லிவிட்டேன். நான் இதற்கு முன்பு 40 கதைகளைக் கேட்டதில்லை” என்றார்.
சினிமாவில் நாம் பார்க்கும் கதைகளை விட அதிக சுவாரசியங்கள் கதை சொல்லும் நிகழ்வுகளில் உண்டு.பலர் வாழ்வை புரட்டிப்போடும் தருணம் என்பதால் அது சற்றே அந்தரங்கமான விசயமும் கூட. அனுபவக் குறைபாட்டால் நிகழ்ந்த ஓர் சிறுதவறை பெருந்தன்மையுடன் நாம் கடந்து செல்வோமாக. அன்பு உடலுக்கு ஆயுள் அதிகம்!
— SR Prabhu (@prabhu_sr) December 7, 2021
இந்நிலையில் கைதி படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், “சினிமாவில் நாம் பார்க்கும் கதைகளை விட அதிக சுவாரசியங்கள் கதை சொல்லும் நிகழ்வுகளில் உண்டு. பலர் வாழ்வை புரட்டிப்போடும் தருணம் என்பதால் அது சற்றே அந்தரங்கமான விஷயமும்கூட. அனுபவக் குறைபாட்டால் நிகழ்ந்த ஒரு சிறுதவறை பெருந்தன்மையுடன் நாம் கடந்து செல்வோமாக. அன்பு உடலுக்கு ஆயுள் அதிகம்” என பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Jacqueline Fernandez :200 கோடி ரூபாயை மிரட்டி பறித்த வழக்கு.. தப்ப முயன்ற பாலிவுட் நடிகை? விமான நிலையத்தில் மடக்கிப்பிடித்த போலீஸ்..!