Valimai 3rd Single: அட.. அட.! அடுத்தடுத்து அப்டேட்டை தூவும் வலிமை குழு.! இன்று மூன்றாவது பாடல்?!
வலிமை படத்தின் மூன்றாவது சிங்கிள் (Third Single) இன்று வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வலிமை படத்தின் மூன்றாவது சிங்கிள் (Third Single) இன்று வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் 'நேர்கொண்ட பார்வை'. இந்தப் படத்தைத் தயாரித்து வெளியிட்டவர் நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர். 'பிங்க்' படத்தின் ரீமேக்கான இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனைத் தொடர்ந்து 'வலிமை' படத்திலும் அஜித் - வினோத் - போனிகபூர் கூட்டணி இணைந்துள்ளது.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. வலிமை படத்தின் அப்டேட் எங்கே என்று கேட்டுக்கொண்டிருந்த காலம் போய் இப்போது அஜித்தின் ரசிகர்களுக்கு ஒரே அப்டேட்டாக வந்து குவிந்து கொண்டிருக்கிறது.
ஏற்கெனவே வலிமை படத்தின் டீசரும் பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, படத்தின் Glimpse வெளியாகி அஜித் ரசிகர்களை கொண்டாட்டத்தின் உச்சத்திற்கு எடுத்து சென்றது என்றே சொல்லலாம். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.
வலிமை படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை முடித்துவிட்டு மீண்டும் அஜித் தனது கால்ஷீட்டை இயக்குநர் ஹெச். வினோத்துக்கே கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனிடையே வலிமை படத்தில் இடம்பெற்றிருக்கும் அஜித்தின் பைக் ரேஸ் காட்சி குறித்த மேக்கிங் வீடியோ வெளியாகி அவரது ரசிகர்களை செம்ம குஷி படுத்தியது. அதற்கு முன்னதாக, வலிமை படத்தில் இருந்து, ‘நான் பார்த்த முதல் முகம் நீ’ பாடல் (second single) கடந்த டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுத, பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் பாடியிருந்தார்.
இந்நிலையில் இன்று வலிமை படத்தின் மூன்றாவது சிங்கிள் (Third Single) வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்