Thunivu Trailer: உலக சாதனை படைக்க இருக்கும் துணிவு ‘ட்ரெய்லர்’..! தாறுமாறு செய்யும் மலேசிய ரசிகர்கள்..!
அஜித் நடிப்பில் இன்று வெளியாக இருக்கும் துணிவு திரைப்படத்தின் ட்ரெய்லர் உலக சாதனை ஒன்றை படைக்க இருக்கிறது.
அஜித் நடிப்பில் இன்று வெளியாக இருக்கும் துணிவு திரைப்படத்தின் ட்ரெய்லர் புதிய உலக சாதனை படைக்க இருக்கிறது.
போனி கபூர் - ஹெச். வினோத் - அஜித் கூட்டணி நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் துணிவு. இத்திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களது கூட்டணியில் முன்னதாக வெளியான வலிமை திரைப்படம் மக்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், இந்தப்படத்தில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது; அத்துடன் இந்தப்படத்துடன் நடிகர் விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படமும் வெளியாக இருப்பதால் இந்தப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த எதிர்பார்ப்பு நிலவுகிறது;
முன்னதாக நேரு ஸ்டேடியத்தில் வாரிசு இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடந்த நிலையில், விஜய் ரசிகர்கள் குஷியாகினர்; இந்த நிலையில் அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் துணிவு படக்குழு இன்று இரவு 7 மணிக்கு துணிவு படத்தின் ட்ரெய்லரை வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனால் இன்று காலை முதலே அஜித் ரசிகர்கள் துணிவு படத்தின் ட்ரெய்லரை எதிர்நோக்கி காத்து இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்வின் மூலமாக இதுவரை உலகில் எந்த திரைப்படமும் செய்யாத ஒரு சாதனையை துணிவு படம் நிகழ்த்த இருக்கிறது;
This is Big 🔥
— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) December 30, 2022
Thala Fort Malaysia Fans RAGE is : ON
For the FIRST Time Ever in World
👉 #ThunivuTrailer launch display in Hologram
👉 Logo Presentation Via 3D Hologram
👉 Many More Gifts
Venue Details & Timings in Below Video.#Thunivu 🔥 #Ajithkumar𓃵 pic.twitter.com/N9kziCxRWa
ஹாலோகிராமில் ரிலீஸ்:
மலேசியாவில் ஹாலோகிராம் மூலமாக துணிவு படத்தின் ட்ரெய்லர் காட்சிப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் ஹாலோகிராம் மூலம் வெளியிடப்பட இருக்கும், முதல் இந்திய படத்தின் ட்ரெய்லராக துணிவு படத்தின் ட்ரெய்லர் மாற இருக்கிறது; இந்த நிகழ்வு மலேசியாவின் கோலாலம்பூர் சிட்டி சென்டரில் இன்று இரவு 11 மணிக்கு நடக்க உள்ளது.,
துணிவு திரைப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, மகாநதி ஷங்கர், ஜி.எம். சுந்தர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்; இப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
சஸ்பென்ஸ்:
முன்னதாக, இந்தப்படத்தின் போஸ்டர் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், படத்தில் இருந்து ‘சில்லா சில்லா’ ‘காசேதான் கடவுளடா’ ‘கேங்ஸ்டா’ ஆகிய மூன்று பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன; இதனைதொடர்ந்து நேற்று படத்தின் கதாபாத்திரங்களின் பெயர்கள் வெளியிட்ட படக்குழு, அஜித்தின் கதாபாத்திரத்தின் பெயரை மட்டும் வெளியிடாமல் சஸ்பென்ஸ் வைத்திருக்கிறது; ட்ரெய்லரில் அவரது பெயர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது;