Good Bad Ugly: அஜித் மீது இவ்வளவு வன்மமா? குட் பேட் அக்லிக்கு எதிராக இப்படி ஒரு மோசடியா?
Good Bad Ugly: குட் பேட் அக்லி படத்தை இணையத்தில் கசியவிட்டது மட்டுமின்றி படத்திற்கு எதிராக சில தில்லுமுல்லு வேலைகளை செய்திருப்பது படக்குழுவிற்கும், அஜித் ரசிகர்களுக்கும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

Good Bad Ugly: தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் கடந்த10ம் தேதி வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி. தமிழ் திரையுலகம் மட்டுமின்றி இந்திய திரையுலகம் சமீபகாலமாக எதிர்கொள்ளும் சிக்கல் எந்தவொரு திரைப்படமும் திரையரங்கில் ரிலீசாகும் தினத்திலே இணையத்தில் கசிவது தயாரிப்பாளர்களுக்கும், படக்குழுவிற்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.
குட் பேட் அக்லி படத்திற்கு எதிராக இப்படியா?
அனைத்து படங்களும் இந்த சிக்கலை எதிர்கொண்டு வரும் நிலையில், குட் பேட் அக்லி படம் மிகவும் வித்தியாசமாக இந்த சிக்கலை எதிர்கொண்டுள்ளது. அதாவது, திரையரங்கில் ரிலீசாகியுள்ள குட் பேட் அக்லி படமாக இணையத்தில் லீக் ஆகாமல், படத்தில் உள்ள காட்சிகளுக்கு வேறு யாரோ டப்பிங் பேசியும், சில காட்சிகள் திரையரங்கில் உள்ள காட்சியாக இல்லாமல் வேறு காட்சியாக இணையத்தில் கசிந்துள்ளது.
பொதுவாகவே, அஜித் மற்றும் விஜய் போன்ற உச்சநட்சத்திரங்களுக்கு எதிரான மனநிலை கொண்டவர்கள் பலரும் உள்ளனர். குறிப்பாக, பொது நிகழ்வுகளில் பெரியளவில் பங்கேற்காத அஜித்திற்கு எதிரான போக்கு கொண்டவர்கள் இணையத்தில் அதிகளவில் காணப்படுகின்றனர். இதுபோன்ற மனநிலை கொண்ட யாரோதான் இந்த வேலையை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்க முடியாத ஒன்று:
மேலும், படத்தை திரையரங்கில் பார்த்து கொண்டாடி வரும் நபர்களுக்கு மத்தியில் திரைப்படத்தை பார்க்காமலும், இணையத்தில் கசிந்துள்ள இந்த படத்தை பார்த்து விமர்சிப்பவர்களுக்கு படத்திற்கு எதிராக எதிர்மறையான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். திரையரங்கில் படம் பார்த்து எதிர்மறை கருத்து கூறுபவர்களின் விமர்சனங்கள் எப்போதும் ஏற்றுக்கொள்ளத்தக்கது ஆகும்.
ஆனால், இணையத்தில் கசிந்துள்ள பிரிண்ட் மூலமாகவும், அதுவும் இதுபோன்று வேறு சில நபர்களால் டப் செய்யப்பட்டு, படத்தில் இல்லாத காட்சிகளால் நிறைந்துள்ள இந்த படத்தை பார்த்து விமர்சிப்பது குட் பேட் அக்லி மட்டுமின்றி எந்த படத்திற்கும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். குட் பேட் அக்லி படம் மட்டுமின்றி எதிர்வரும் காலங்களில் எந்த ஒரு படத்திற்கும் இதுபோன்ற நிலை ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும் திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
குறையாத வசூல் வேட்டை:
ஆனால், குட் பேட் அக்லி படம் படத்திற்கு கடந்த 5 நாட்களாக அரங்குகள் நிறைந்த காட்சிகளாக படம் ஓடியதாலும் வார வேலை நாட்களிலும் எதிர்பார்த்த ரசிகர்கள் கூட்டம் வரும் என்று திரையரங்க உரிமையாளர்கள் நம்பிக்கையுடன் இருப்பதாலும் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குட் பேட் அக்லி படம் இதுவரை 145 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்துள்ளது. மேலும், இந்த மாதத்தில் சச்சின் ரி ரிலீஸ் தவிர எந்த மிகப்பெரிய படத்தின் வெளியீடும் இல்லை என்பதால் இந்த மாத இறுதிவரை படத்தின் வசூலில் பெரியளவு பாதிப்பு இருக்காது என்றே கருதப்படுகிறது.





















