நட்சத்திர பட்டாளம் , டிரேட்மார்க் அஜித் வசனங்கள்..எக்கச்சக்க மாஸ்...குட் பேட் அக்லி டிரைலர் ரிவியு
Good Bad Ugly Trailer Review : ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் ரிவியு இதோ

குட் பேட் அக்லி டிரைலர்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இன்று ஏப்ரல் 4 ஆம் தேதி இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அர்ஜூன் தாஸ் ,பிரபு , த்ரிஷா , சுனில் , யோகிபாபு , ரெடின் கிங்ஸ்லி , பிரசன்னா , பிரியா பிரகாஷ் வாரியர் , சிம்ரன் என பெரும் நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். குட் பேட் அக்லி டிரைலர் ரிவியு இங்கே பார்க்கலாம்
குட் பேட் அக்லி டிரைலர் ரிவியு
மிகப்பெரிய கேங்ஸ்டராக இருக்கும் அஜித் தனது மகனுக்காக வன்முறையை விடுகிறார். ஆனால் அதே மகனுக்கு ஒரு ஆபத்து என்று வரும் போது மீண்டும் களமிறங்குகிறார்.
திர்ஷா இல்லனா நயன்தாரா , மார்க் ஆண்டனி ஆகிய படங்களின் மூலம் கவனமீர்த்த ஆதிக் ரவிச்சந்திரன் ஒரு பக்கா ஃபேன்பாய் சம்பவமாக இப்படத்தை எடுத்திருக்கிறார் என்பதை இந்த டிரைலர் காட்டுகிறது. அர்ஜூன் தாஸ் ,பிரபு , த்ரிஷா , சுனில் , யோகிபாபு , ரெடின் கிங்ஸ்லி , பிரசன்னா , பிரியா பிரகாஷ் வாரியர் , சிம்ரன் என யாரும் எதிர்பார்க்காத வகையில் பெரும் நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடித்துள்ளார்கள். குறிப்பாக முக்கிய வில்லனாக அர்ஜூன் தாஸ் இப்படத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பார் என எதிர்பார்க்கலாம்.
மார்க் ஆண்டனி படத்தில் ப்ழைய இளையராஜா பாடல்களை பயண்படுத்தியது ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. அதேபோல் இந்த படத்திலும் ஒத்த ரூபாயும் தாரேன் பாடலின் ரீமிக்ஸ் இடம்பெற்றுள்ளது. அஜித் பேசி ஹிட்டான டிரேட் மார்க் வசனங்கள் , கார் சேஸிங் , ரகரகமான துப்பாக்கி , என திரையரங்குகள் திருவிழாக் கோலமாக மாற எல்லா அம்சங்களும் இந்த படத்தில் உள்ளன. பின்னனி இசையில் ஜிவி பிரகாஷ் ஹைப் ஏற்றுகிறார்.
Maamey!
— Mythri Movie Makers (@MythriOfficial) April 4, 2025
THE MASS CELEBRATION is here 🤩#GoodBadUglyTrailer out now ❤🔥
▶️ https://t.co/9KbtVtrkqP#GoodBadUgly Grand release worldwide on April 10th, 2025 with VERA LEVEL ENTERTAINMENT 💥💥#AjithKumar @trishtrashers @MythriOfficial @Adhikravi @gvprakash @AbinandhanR… pic.twitter.com/d2ECC3CoJz
ரஜினிக்கு பேட்ட , விஜய்க்கு மாஸ்டர் ,தி கோட் போன்ற படங்கள் ஒரு ஸ்டாராக அவர்களை கொண்டாடும் விதமாக அமைந்தன. அந்த வகையில் அஜித்திற்கு அவரது தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் பார்த்து பார்த்து செதுக்கியிருக்கும் படமே குட் பேட் அக்லி. கோர்வையான கதை இருந்து நல்ல திரைக்கதையும் இருந்தால் இந்த ஆண்டு ஒரு ப்ளாக்பஸ்டர் ஹிட் நிச்சயம்






















