மேலும் அறிய
Advertisement
Aishwarya rajesh | சிவகார்த்திகேயன் பட இயக்குநரோடு கூட்டணி போடும் ஐஸ்வர்யா ராஜேஷ்!
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்த படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர்களும் இவர்களும் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இதனையடுத்து இவரது நடிப்பில் உயர்திரு 420, சட்டப்படி குற்றம் உள்ளிட்ட படங்கள் வெளியானது.
பின்னர் தனுஷ் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான காக்கா முட்டை படத்தில் நடித்திருந்தார். சென்னையில் உள்ள அடிமட்ட பகுதியில் வசிக்கும், நடுத்தர குடும்ப பெண்ணாக நடித்திருந்தார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதைத் தனது பாணியில் வெளிக்காட்டி கச்சிதமாக நடித்து காண்பிப்பதில் வல்லவர்.
அதனால் தான் இவரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நடித்தால் ஹீரோயினாக தான் நடிப்பேன் என்று இல்லாமல் தோழி, தங்கை போன்ற கதாபாத்திரங்களில் இவர் நடித்து வருகிறார்.
சமீப காலமாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பு சமீபத்தில் வெளியான படம், திட்டம் இரண்டு. நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த படத்தில் அவர் காவல் அதிகாரியாக நடித்திருந்தார்.
தனது தோழியைக் கொலை செய்து விட்டார்கள் என விசாரணை செய்ய, அதற்கு பின்னால் இருக்கும் பல சுவாரசியமான தகவல்கள் படத்தில் காட்சிப்படுத்தி இருந்தார் படத்தின் இயக்குநர். அதற்கு ஏற்றார் போல் ஐஸ்வர்யா ராஜேஷும் தனது நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு மெழுகு ஏற்றினார்.
View this post on Instagram
இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இவரது அடுத்த படத்தை இயக்குநர் நெல்சன் இயக்க உள்ளார். தனது முந்தைய படம் போல் இல்லாமல் முழுக்க முழுக்க வித்தியாசமான கதைக்களத்துடன் இந்த படம் உருவாக உள்ளதாக இயக்குநர் நெல்சன் தெரிவித்து உள்ளார்.
மேலும் அவருடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படம் குறித்த அடுத்த அறிவிப்பு விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள இப்படம், அடுத்த மாதம் 9ஆம் தேதி வெளியாக உள்ளது.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion