Aishwarya Rajesh Theera Kaadhal: முக்கோணக் காதல் கதை: சத்தமே இல்லாமல் ஓடிடியில் வெளியான தீராக் காதல்!
கடந்த மே 26ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியானது. முக்கோணக் காதல் கதையாக இப்படம் உருவாகியிருந்த நிலையில், இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
அதே கண்கள், பெட்ரோமாக்ஸ் ஆகிய படங்களை இயக்கிய ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஜெய், சிவதா ஆகியோர் நடித்த திரைப்படம் தீராக் காதல். லைகா நிறுவனம் இப்ப்படத்தைத் தயாரித்த நிலையில், சித்துக்குமார் இப்படத்துக்கு இசை அமைத்திருந்தார். ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
முன்னணி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்
முன்னதாக இப்படத்தின் ட்ரெய்லர், ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்புகளை அதிகரித்தன. இந்நிலையில் கடந்த மே 26ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியானது. முக்கோணக் காதல் கதையாக இப்படம் உருவாகியிருந்த நிலையில், இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
ஒருபுறம் 96 படத்தின் தொடர்ச்சியான கதை போல் இப்படம் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்த நிலையில், மற்றொருபுறம் ஐஸ்வர்யா ராஜேஷ் வழக்கம்போல் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.
ஓடிடி தளத்தில் ரிலீஸ்
மேலும், சுமார் 6 கோடி பட்ஜெட் செலவில் எடுக்கப்பட்ட தீராக் காதல் படம் திரையரங்குகளில் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இந்நிலையில் இப்படம் நேற்று நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Streaming now #TheeraKaadhal @NetflixIndia @LycaProductions @rohinv_v ❤️ pic.twitter.com/GcDA1cA6es
— aishwarya rajesh (@aishu_dil) June 24, 2023
அட்டக்கத்தி படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக உருவெடுத்துள்ளார்.
சமீபகாலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வரும் நிலையில், முன்னதாக ஃபர்ஹானா திரைப்படம் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் இஸ்லாமிய பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ஃபர்ஹானா திரைப்படத்துக்கு எதிர்ப்புகள் வலுத்த நிலையில், இப்படம் வசூலில் பின்னடைவை சந்தித்தது.
தொடர் சர்ச்சைகள்
இதேபோல் முன்னதாக தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் “புஷ்பா படத்தின் ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் தான் நடித்திருந்தால், ராஷ்மிகாவை காட்டிலும் நன்றாகப் பொருந்தி இருப்பேன்” என ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியது சர்ச்சையைக் கிளப்பியது.
தொடர்ந்து இந்த விஷயம் பூதாகரமாக வெடித்த நிலையில், ஸ்ரீ வள்ளி கதாபாத்திரத்தை உதாரணம் சொல்லி தான் பேசியதாகவும், ராஷ்மிகாவின் கடின உழைப்பை தான் குறை கூறவில்லை என்றும் கூறி இருந்தார். இதனைத் தொடர்ந்து ராஷ்மிகாவும் ஐஸ்வர்யா ராஜேஷின் பதிவை ரீட்வீட் செய்து அவருக்கு இதயங்களைப் பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Seenu Ramasamy: 'பொதுவெளியில் சாதி பெயரை கொண்ட பாடல்களை ஒலிபரப்ப தடை செய்யுங்க' - சீனு ராமசாமி வேண்டுகோள்