Agnipath Scheme: பொதுச்சொத்தை சேதப்படுத்துபவர்கள் தேச துரோகிகள்... கடுப்பான இயக்குநர் பேரரசு
அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல வேலை வாய்ப்பு சலுகைகளை அறிவித்து வருகிறது.
அக்னிபத் திட்டம் மூலம் தேசத் துரோகிகள் அடையாளம் காட்டப்பட்டு விட்டதாக இயக்குநர் பேரரசு விமர்சித்துள்ளார்.
இந்திய பாதுகாப்பு துறையின் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அக்னிபத் என்ற திட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த ஜூன் 14 ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இத்திட்டம் இந்திய ராணுவத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும் என நினைப்பவர்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்த திட்டத்தில் 4 ஆண்டுகால ஒப்பந்தம் அடிப்படையில் ஆண்டுக்கு சுமார் 45 ஆயிரம் இளைஞர்கள் இதில் பணியமர்த்தப்படுவார்கள்.
குறைந்தது 17 வயது முதல் அதிகப்பட்சமாக 23 வயது வரையள்ளவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். மேலும் இந்த 4 ஆண்டுகால பணிக்கு பின் பயிற்சி பெறுபவர்களுக்கு வட்டியுடன் சேர்த்து 11.71 லட்சம் ரூபாயாக கிடைக்க வாய்ப்புள்ளது எனவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஆனால் இந்த திட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பீகார், ஹரியானா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் போராட்டம் வன்முறையாக மாறி ரயிலுக்கு தீ வைப்பு உட்பட பல பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன.
போராட்டத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல வேலை வாய்ப்பு சலுகைகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் பொதுச்சொத்தை சேதப்படுத்துபவர்கள் தேச துரோகிகள் என இயக்குநர் பேரரசு சாடியுள்ளார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் பல இடங்களில் சிறப்பு யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
#JUSTIN | பொதுச்சொத்தை சேதப்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தேச துரோகிகள் தான் – இயக்குநர் பேரரசுhttps://t.co/wupaoCQKa2 | #perarasu #agnipath pic.twitter.com/zvCejly4XS
— ABP Nadu (@abpnadu) June 22, 2022
அந்த வகையில் ராமநாதபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பேரரசு கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அக்னிபத் திட்டம் அனைவருக்கும் பொதுவானது என்றும், இந்த திட்டம் மூலம் தேசத் துரோகிகள் அடையாளம் காட்டப்பட்டு விட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் இவர்களை பின்னால் இருந்து யாரோ இயக்குகிறார்கள். இப்படி வன்முறையில் ஈடுபடும் இளைஞர்கள் எப்படி நாட்டை காப்பாற்றுவார்கள் என பேரரசு கேள்வியெழுப்பியுள்ளார். அவரின் இந்த கருத்து திரையுலகில் பேசுபொருளாக மாறியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்