மேலும் அறிய

Nayanthara: செம்பருத்தி டீ குடிக்க சொன்ன நயன்தாரா! வெளுத்து வாங்கிய கல்லீரல் டாக்டர்!

தவறான மருத்துவ ஆலோசனை வழங்கியதாக நடிகை சமந்தாவை விமர்சித்த கல்லீரல் மருத்துவர் ஃபிலிப்ஸ் தற்போது நடிகை நயன்தாராவை விமர்சித்துள்ளார்

சமந்தாவை விமர்சித்த டாக்டர் ஃபிலிப்ஸ்

சமீபத்தில் நடிகை சமந்தா தவறான தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தவறான மருத்துவ ஆலோசனை வழங்கியதாக கூறி அவரை கடுமையாக விமர்சித்தார் கல்லீரல் மருத்துவர் ஃபிலிப்ஸ்.  வைரஸ் பாதிப்புகளுக்கு ஹைட்ரஜன் பெராக்சைட் நெபுலைசேஷன் (Hydrogen Peroxide Nebulisation) எனப்படும் சிகிச்சையை பயன்படுத்துவதாக நடிகை சமந்தா (Samantha) தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

எந்த வித மருத்துவ அறிவும் இல்லாமல் ஆயிரக் கணக்கான மக்களுக்கு தவறான ஆலோசனை வழங்கிய சமந்தாவை கைது செய்ய வேண்டும் என்று ஃபிலிப்ஸ் தெரிவித்திருந்தார். இந்த நிகழ்வு பெரியளவில் சர்ச்சையாகி ஓய்ந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது நடிகை நயந்தாராவை டாக்டர் ஃபிலிப்ஸ் விமர்சித்து பதிவிட்டுள்ளார்

செம்பருத்தி டீ பரிந்துரைத்த நயன்தாரா 

Nayanthara: செம்பருத்தி டீ குடிக்க சொன்ன நயன்தாரா! வெளுத்து வாங்கிய கல்லீரல் டாக்டர்!

சமீபத்தில் நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் தொடர்ச்சியாக செம்பருத்தி டீ குடித்து வருவதாகவும் தனது ரசிகர்களையும் செம்பருத்தி டீ குடிப்பதை பரிந்துரைத்திருந்தார். சர்க்கரை நோய் , உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு செம்பருத்தி டீ நல்லது என்றும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது என்று நயன்தாரா தெரிவித்திருந்தார். இந்த டிப்ஸை தனக்கு தனது ஊட்டச் சத்து நிபுணரான முன்முன் கனேரிவால் பரிந்துரைத்ததாக அவரை பாராட்டியிருந்தார். நயன்தாராவின் இந்த பதிவை விமர்சித்து டாக்டர் ஃபிலிப்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில்  “ செம்பருத்தி டீ குடிப்பதற்கு ருசியானது என்பதோ நயன்தாரா நிறுத்தியிருந்தால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அதோடு நிற்காமல் செம்பருத்தி டீயின் மருத்துவ குணத்தைப் பற்றி பேசி தனது அறிவின்மையை வெளிப்படுத்தி இருக்கிறார். செம்பருத்தியின் மருத்துவ குணங்கள் என்று நயன்தாரா குறிப்பிட்டவை எதுவுமே நிரூபிக்கப்படாத உண்மைகளே. இந்த பதிவு அவரது ஊட்டச்சத்து நிபுணரை ப்ரோமோட் செய்யும் நோக்கத்திற்காகவே அவர் இந்த பதிவை பதிவிட்டுள்ளார். செம்பருத்தி டீயை தினமும் குடிப்பதால் ஆண் மற்றும் பெண்களுக்கு நிறைய பாதிப்புகள் ஏற்படும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. நடிகை நயன்தாரா ஆயுர்வேத மருத்துவ முறையே வாழ்க்கையை வழிநடத்திச் செல்லும் என்கிற புரிதலில் பல்வேறு போலியான தகவல்களை பகிர்ந்துள்ளார். “ என்று அவர் தெரிவித்துள்ளார். 

அவரது இந்த பதிவைத் தொடர்ந்து நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனது பதிவை நீக்கியுள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம்.. யார் இவர்?
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம்.. யார் இவர்?
சென்னையில் ஓர் அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை தொடங்கும் ஏ.ஆர்.ரஹ்மான்
சென்னையில் ஓர் அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை தொடங்கும் ஏ.ஆர்.ரஹ்மான்
Delhi New CM: டெல்லி அரசியலில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சராக பதவியேற்ற அதிஷி!
டெல்லி அரசியலில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சராக பதவியேற்ற அதிஷி!
ஆபிஸ்ல 8 மணி நேரத்திற்கு மேல வேலை செய்ய சொல்றாங்களா? ரூல்ஸை தெரிஞ்சுக்கோங்க பாஸ்!
ஆபிஸ்ல 8 மணி நேரத்திற்கு மேல வேலை செய்ய சொல்றாங்களா? ரூல்ஸை தெரிஞ்சுக்கோங்க பாஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Suchitra vs Vairamuthu |’’நீ என்ன PSYCHIATRIST-ஆ?நோபல் பரிசு கொடுக்கலாமா?’’கடுப்பான சுசித்ராTirupati Laddu History | Mysuru Palace Elephant Angry | Barriers-யை உடைத்து எறிந்த யானை மைசூரில் அலறியோடிய மக்கள் பதறிய பாகன்Rahul on laddu | லட்டில் பன்றி கொழுப்பா? கொதித்தெழுந்த  ராகுல்! ஜெகன், நாயுடுவுக்கு எச்சரிக்கை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம்.. யார் இவர்?
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம்.. யார் இவர்?
சென்னையில் ஓர் அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை தொடங்கும் ஏ.ஆர்.ரஹ்மான்
சென்னையில் ஓர் அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை தொடங்கும் ஏ.ஆர்.ரஹ்மான்
Delhi New CM: டெல்லி அரசியலில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சராக பதவியேற்ற அதிஷி!
டெல்லி அரசியலில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சராக பதவியேற்ற அதிஷி!
ஆபிஸ்ல 8 மணி நேரத்திற்கு மேல வேலை செய்ய சொல்றாங்களா? ரூல்ஸை தெரிஞ்சுக்கோங்க பாஸ்!
ஆபிஸ்ல 8 மணி நேரத்திற்கு மேல வேலை செய்ய சொல்றாங்களா? ரூல்ஸை தெரிஞ்சுக்கோங்க பாஸ்!
மதுரை: பவுடர் பால் குடித்த 2 மாத குழந்தை மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு!
மதுரை: பவுடர் பால் குடித்த 2 மாத குழந்தை மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு!
Tvk Vijay maanadu: தவெக முதல் மாநாடு... மீண்டும் அனுமதி கேட்டு எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்த புஸ்ஸி ஆனந்த்
Tvk Vijay maanadu: தவெக முதல் மாநாடு... மீண்டும் அனுமதி கேட்டு எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்த புஸ்ஸி ஆனந்த்
இலங்கை அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவு.. வாக்கு எண்ணிக்கை இன்றே தொடக்கம்!
இலங்கை அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவு.. வாக்கு எண்ணிக்கை இன்றே தொடக்கம்!
Breaking News LIVE: தமிழ்நாடு மீனவர்கள் 37 பேர் இலங்கை கடற்படையால் கைது
Breaking News LIVE: தமிழ்நாடு மீனவர்கள் 37 பேர் இலங்கை கடற்படையால் கைது
Embed widget